திருவண்ணாமலை மாவட்டத்தின் விவசாய குறை தீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விவசாயிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பேசினர். குறிப்பாக நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், ஏரிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும், குப்பநத்தம் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் கடைமடை பகுதியான ராதாபுரம் ஏரிக்கு வருவதில்லை என பல்வேறு கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசினர்.




விவசாயிகள் பேசுகையில்; 


விவசாயக் குறைதீர் கூட்டங்களில் விவசாயிகள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் முறையான பதில் கொடுப்பது கிடையாது என்றும் நடவடிக்கையில் எடுப்பது கிடையாது என பொதுவாக கூறினார்.மேலும் விவசாயிகள் கொடுக்கும் மனுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட எந்த அதிகாரிகளையும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை பதில் கூறுவதும் இல்லை என தெரிவித்தவுடன் விவசாய குறைந்திடும் கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் திடீரென கோபப்பட்டு அதிகாரிகளை பொதுவாக குறை கூறாதீர்கள் எந்த மனமீது நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டு பேசுங்கள் என கோபப்பட்டு ஆத்திரமடைந்து பேசினார்.மேலும் திங்கள்கிழமை தோறும் அதிகாரிகள் பிற்பகல் 3 மணி முதல் 4:00 மணி வரை மத்திய உணவு கூட சாப்பிடாமல் மக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் இதுபோன்ற அதிகாரிகளை குறை கூற வேண்டாம் என எச்சரித்ததுடன் நான் மற்ற கலெக்டர் மாதிரி இல்லை எனவும் எனக்கு கீழ் உள்ள அதிகாரிகளை திட்டும் உரிமை எனக்கு மட்டுமே உள்ளது நீங்கள் குறை கூற கூடாது என கடுமையாக விவசாய சங்க நிர்வாகியை எச்சரித்தார்.


 




 


மாவட்டத்திலுள்ள அதிகாரிகளை கடந்த ஆறு மாத காலமாக கடுமையாக பணிச்சுமை உள்ளதாகவும் பல ஊழியர்கள் சர்க்கரை வியாதி உள்ளிட்ட நோய்களுக்கு ஆட்பட்டு அவதிப்பட்டு வருவதாகவும், ஒரு சிலர் மன உளைச்சல் காலமாக இருந்தும் உள்ளார்கள் எனவும் மக்களுக்காக பாடுபடும் அதிகாரிகளை பொதுவாக குறை கூற வேண்டாம் எனவும் அதிகாரிகள் ஏதாவது குறை இருந்தால் அவர்களது நடவடிக்கை தன்னிடம் புகார் அளிக்க வேண்டும் எனவும் கிட்டத்தட்ட மூன்று நிமிடங்களுக்கு மேலாக கடுமையான கோபப்பட்ட ஆட்சியர் விவசாய சங்கத்தினரை கடுமையாக சாடினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவசாய குறைவுக் கூட்டத்தில் விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.