தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலங்கங்களில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைத்தீர் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் கந்து வட்டி கொடுமையில் இருந்து தங்களை காக்க கோரியும் மற்றும் நிலம் அபகரிப்பு கும்பலிடம் இருந்து தங்களது நிலத்தினையும் மற்றும் தங்களையும் மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தீக்குளிக்க முயன்றவர்கள் கூறுகையில், செங்கம் தாலுக்கா முன்னூர்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், ராஜகுமாரி தம்பதி, இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவருக்கு சொந்தமாக சர்வே எண் 123/5B என்ற பெயரில் 73 சென்ட் நிலம் உள்ளது. சில வருங்கள் முன்பு குடும்ப தேவைக்காக இந்த நிலத்தை செங்கம் அடுத்த தோக்கவாடி கிராமத்தை சேர்ந்த சாமு என்பவரிடம் அடகு வைத்து 1.50 லட்சம் கடன் வாங்கி உள்ளார். 



அதன் பிறகு 14 மாதங்கள் கழித்து 1.50 லட்சம் ரூபாய் பணத்திற்கு அசல் வட்டியும் சேர்த்து கடந்த கடந்த ஆண்டு சாமுவேலிடம், 2 லட்சம் ரூபாயாக வெங்கடேசன் சாட்சிகள் முன்னணியில் கொடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது வெங்கடேசன் உடன்படிக்கையை உடனடியாக அதனை எழுதி கொடுத்து சொத்தை ரத்து செய்து தரும்படி கேட்டுள்ளார். அதற்கு சாமுவேல் நாளை உடன்படிக்கை சொத்தை ரத்து செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அங்கு இருந்து வெங்கடேசன் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் சாமுவேலிடம் கேட்டுள்ளார் அப்போது அவர் இன்று, நாளை என்று காலம் தாழ்த்தி கடந்த ஒரு மாதமாக காலம் தாழ்த்தி வந்துள்ளார். அதன் பிறகு வெங்கடேசன் அப்போது சாட்சிகளை வைத்து சாமுவேலிடம் உடன்படிக்கை சொத்தை ரத்து செய்து கொடுக்கள் என நியாயம் கேட்டுள்ளார். அதற்கு சாமுவேல் இன்னும் வெங்கடேசன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு வெங்கடேசன் பணம் கொடுக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.



அதன் பிறகு சாமுவேல் அவருடைய அடியாட்கள் கண்ணன், முத்துக்குமார், கார்த்திகேயன், அண்ணாமலை ஆகிய 4 நபர்களும் சேர்ந்து வெங்கடேசனை பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். சிலநாட்கள் கழித்து இந்த நான்கு நபர்களும் வெங்கடேசனிடம் உன்னுடைய நிலத்தை எழுதி கொடுக்கவில்லை என்றால் உங்களுடைய வீட்டை JCB யை வைத்து இடித்து விடுவேன் என்று மிரட்டி உள்ளனர். மேலும் நான்கு நபர்களும் தினந்தோறும் வீட்டிற்கு காரில் வந்து உன்னுடைய நிலத்தை எழுதிகொடு அல்லது 15 லட்சம் ரூபாய் பணம் கொடு என்று தினந்தோறும் மிரட்டி வருகிறார்கள். இவர்களாலும் சாமுவேல் மூலமாக எங்களுடைய குடும்பத்திற்கு உயிருக்கு ஆபத்து உள்ளது எனக்கூறி தனக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கந்து வட்டி தொல்லையில் இருந்து என்னையும் எங்களுடைய விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும் தீக்குளிக்க முயன்றவர்களை காவல்துறையினர் மீட்டு அவர்களின் மீது தண்ணீர் ஊற்றி பின்னர் விசாரனைக்காக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே போன்று தொடர்ச்சியாக வாரம்தோறும் தங்களுடைய பிரச்சனையை கூறி தீக்குளிக்க முயல்கின்றனர்