பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்க கூடிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு திறந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். ராஜகோபுரம் முன் ஏராளமான பக்தர்கள் நின்று சாமி தரிசனம் செய்துகொண்டு இருந்தனர். அப்போது  திடீரென வாலிபர் ஒருவர் ராஜகோபுரத்தின் மீது வெளிப்புறம் வழியாக கோபுரத்தின் மேல் ஏறி கொண்டு இருந்தார் அங்கு இருந்த பொதுமக்கள் அவர் கோவிலின் கோபுரத்தை சுத்தம் செய்ய ஏறியதாக நினைத்து அமைதியாக வாலிபர் ஏறுவதை கண்டு உள்ளனர். கோபுரத்தின் 20 அடி உயரத்தில் சென்று அமர்ந்து கொண்ட இளைஞர் தான் புதியதாக வாங்கிய செல்போனை ஒருவர் திருடி சென்றுவிட்டதாகவும், அவரிடம் இருந்து செல்போனை வாங்கி தராவிட்டால் ராஜகோபுரம் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று தற்கொலை மிரட்டல் விடுத்தார். 



தகவலறிந்து ராஜகோபுரம் பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் பேசி அவரை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். அதன்பின் ராஜகோபுரத்தின் மேல் ஏறி சென்று அவரை பத்திரமாக மீட்டு கீழே அழைத்து வந்தனர். கோபுரத்தின் முன் நடந்த இச்சம்பவத்தை பார்க்க ஏராளமானோர் பார்க்க திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த வாலிபரை காவல்துறையினர் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் வர்சிகுடி வடக்கு கூவம் பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் (23) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக திருவண்ணாமலையில் சுற்றி திரிந்து வந்ததும் தெரியவந்தது. 



இந்த தற்கொலை மிரட்டல் சம்பவம் குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் பல ஆண்டுகளாக இப்பகுதியில் கஞ்சா புகைத்துவிட்டு பக்தர்களிடம் பணம் கேட்டு மிரட்டி வருபவர் என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகளை திருடும் முயற்சியிலும் ஈடுபடுவார் எனவும் குற்றம்சாட்டி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் பொது சொத்துக்களை சேதப்படுத்தும் வீடியோ சமூகவலைத்தலங்களில் வைரல் ஆன நிலையில் வன்முறையில் ஈடுபட்ட அந்த இளைஞர் மனநலம் பாதித்தவர் என காவல்துறை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. இதனை முற்றிலும் மறுத்திருந்த அப்பகுதி மக்கள் திருவண்ணாமலையில் காவல்துறையின் அனுமதியுடன் பல இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக குற்றம் சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. 


தேர்தல் அறிக்கையை நிறைவேற்றியதாக திமுகவின் வரலாற்றில் இல்லை' - எடப்பாடி பழனிச்சாமி