நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அருணாச்சலேஷ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 10-ஆம்தேதி பஞ்சமூர்த்திகள் அண்ணாமலையார் சன்னதி எதிரே உள்ள 63 அடி உயர தங்க கொடிமரத்தின்எதிரே எழுந்தருளி விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைப்பெற்றது.  அதனைத்தொடர்ந்து அன்று காலை மற்றும் இரவில் கோவில் வளாகத்தில் உள்ள 5-ம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், உண்ணாமலை சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உற்சவம் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உலா நடைபெற்றது. 




அதனை தொடர்ந்து 2-ம் நாள் விழாவான இன்று  (15.11.2021) காலை கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உற்சவத்திற்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.பின்னர் மேளதாளங்கள் முழங்க விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு விநாயகர் மற்றும் சந்திரசேகரர் கொண்டு வரப்பட்டு ராஜகோபுரம் முன்பு எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் திரண்டு நின்று வழிபட்டனர். பின்னர் விநாயகர் மற்றும் சந்திரசேகர் 5ம் பிரகாரத்தில் வீதிஉலா நடைப்பெற்றது.




இதில் கலந்து கொண்ட பக்தர்கள்  சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு சுமார் 8 மணியவில்  கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர்,முருகர்,உண்ணாமுலை சமேயத அருணாச்சலேஷ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவிலின் ஊழியர்கள் பஞ்சமூர்த்திகளை தோலில் சுமந்து வாரு பஞ்சமூர்த்திகளை ராஜகோபுரம் வைரையில் தூக்கி வந்தனர். ராஜகோபுரம் முன்பு பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 


இந்நிலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய விழாவாக வருகிற நவம்பர் மாதம் 19-ஆம் தேதி அன்று காலை நான்கு மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபமும் அன்று மாலை அண்ணாமலையார் கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள் மற்றும் தனியார் துறைகள் அனைத்தும் ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளித்தும், அதற்கு பதிலாக டிசம்பர் 4-ஆம் தேதி அன்று அந்த விடுமுறைக்கு பதிலாக அனைத்து பள்ளிகளும்  செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.