தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது இதனால் பல பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் அணைகள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆற்றங்கரையோரம் நீர் நிலையில் அருகில் கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் நீரினால் சிதைந்து முற்றிலுமாக இடிந்து விழுகின்றது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிைய அடுத்த இரும்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பழங்காமூர் கிராம பகுதியில் உள்ள கமண்டலநதி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள காவாங்கரை பகுதியில் ராமனின் மனைவி பச்சையம்மாள் (70) இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இவர் ஓலை குடிசை போட்டு தனிமையில் வசித்து வந்தார். சமீபத்தில் பெய்த மழையால் குடிசையின் தரையும், மண் சுவர்களும் ஈரமாக இருந்தது. அதில் தான் அவர் படுத்துத் தூங்கி எழுந்து வந்தார்.
அவர், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் ஓலை குடிைசயில் படுத்துத் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை சுமார் 2 மணியளவில் திடீெரன குடிசையின் மண்சுவர் இடிந்து பச்சையம்மாள் மீது விழுந்தது. அதில் படுத்த படுக்கையாகவே அவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். இதுபற்றி பற்றி தகவல் அறிந்ததும் இரும்பேடு ஊராட்சி மன்ற தலைவர் தரணி வெங்கட்ராமன், ஒன்றிய கவுன்சிலர் பூங்காவனம்கவுரி ஆகியோர் உடனே கிராம நிர்வாக அலுவலர் கோபாலுக்கு தகவல் தெரிவித்தனர். ஆரணி தாசில்தார் பெருமாள், தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்புப்படை வீரர்கள் விரைந்து வந்து ஓலை குடிசையில் இடிந்து விழுந்த மண் சுவரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பலியான பச்சையம்மாளின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆரணி நகர காவல்துறையினர் உயிரிழந்த பச்சையம்மாளின் மகள் தவமணி கொடுத்த புகாரின் பேரில் துணைஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து வேட்டவலம் அடுத்த நல்லான்பிள்ளை பெற்றாள் கிராமத்தை சேர்ந்த கணேசன் வயது (65) இவர் தான் வளர்த்து வரும் கால்நடைகளை வயல்வெளிக்கு அழைத்து சென்றார் அங்குள்ள வயல்வேளியில் கால்நடைகளை கட்டிவிட்டு அப்பகுதியில் உள்ள மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது திடீரென கதிரேசனை மின்னல் தாக்கியது இதில் உடல் சுருங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேட்டவலம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விரைந்து சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த துணை ஆய்வாளர் சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்களை சோகத்தில் மூழ்கியுள்ளது.