திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர பகுதியில் உள்ள அருணகிரி சத்திரம் பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி விஜயகுமார் (42) இவருடைய மனைவி உஷாராணி (38) இவர்களுக்கு திருமணம் ஆகி கோகுல் (24) என்ற மகன் உள்ளார். தினக்கூலி தொழிலாளியான விஜயகுமார் கடந்த 6 நாட்களுக்கு முன் செய்யாறு அருகே உள்ள செய்யாற்று வென்றான் என்ற கிராமத்தில் முருகன் என்பவரின் வீட்டில் 2 சவரன் தங்க நகை திருடி உள்ளார். இதையடுத்து முருகன் நகை காணவில்லை என்று வீட்டில் தேடியுள்ளார் அதன் பிறகு கிடைக்கவில்லை என்பதால் அனக்காவூர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முருகன் வீட்டில் சென்று விசாரணை செய்தனர். அதனைத்தொடர்ந்து அனக்காவூர் காவல் நிலைய காவலர்கள் முருகன் என்பவர் வீட்டில் தங்க நகை திருடியது விஜயகுமார் என்பது தெரியவந்தது இதனையடுத்து அனக்காவூர் காவல் நிலைய காவல்துறையினர் விஜயகுமாரை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
மேலும் அனக்காவூர் காவல்துறையினர் விஜயகுமாரை விசாரணைக்கு அழைத்த சென்றதால் அவமானம் தாங்க முடியாத விஜயகுமாரின் மனைவி உஷாராணி மற்றும் மகன் கோகுல் ஆகியோர் பையூர் கிராமம் பகுதியில் உள்ள பாறை குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். இவர்கள் குளத்தில் குதித்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் குளத்தில் தற்கொலைக்கு முயன்ற பொதுமக்கள் உஷாராணியை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மகன் கோகுல் நீரில் மூழ்கி குளத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு சென்ற கூலி தொழிலாளி விஜயகுமார் தன்னுடைய மகன் இறந்த துக்கத்தை கேட்டு மனது உடைந்து போன கூலி தொழிலாளி சம்பவடத்திற்கு அடக்கம் செய்து விட்டு மனசோர்வுடன் காணப்பட்டார்.
பின்னர் இன்று விடியற்காலையில் தன்னுடைய சொந்த கிராமமான வேலூர் மாவட்டம் ஆற்காடு தாலுக்கா வளையாத்துர் கிராமத்தில் உள்ள வீட்டில் முருகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வந்த ஆற்காடு தாலுக்கா காவல்துறையினர் கூலிதொழிலாளியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 சவரன் தங்க நகைக்காக ஓரே குடும்பத்தில் 2 உயிர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எண்ணம் வரும்பட்சத்தில் கீழ்கண்ட 24 மணி நேர இலவச தொலைபேசி சேவை மூலம் தற்கொலை தடுப்புக்கான ஆலோசனைகளை பெறலாம் 1800-3000-2233, 104