திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான 12 வகுப்பு மாணவிக்கும் தண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதையறிந்த சைல்டு லைன் மற்றும் சமூக நலத்துறை, காவல்துறை அலுவலர்கள் பெண்ணின் பெற்றோரிடம் குழந்தை திருமணத்தை பற்றியும் அதன் பிறகு ஏற்படும் பிரச்னைகளை பற்றியும் எடுத்துக்கூறி பள்ளி மாணவியை மீட்டனர். இதேபோன்று ராதாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அகரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு மலப்பாப்பம்பாடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பல்லியம்பட்டு கிராமத்தைச் சார்ந்த இளைஞருக்கும் நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். மேலும் மேல்பாய்ச்சார் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் ஊத்தங்கரையை சேர்ந்த வாலிபருக்கும் நடைபெற இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் மீட்கப்பட்ட  3 சிறுமிகளும் திருவண்ணாமலை நகர்  பகுதியில் பெரும்பாக்கம் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். சைல்டு ஹெல்ப்லைன் ஒருங்கிணைப்பாளர் அசோக், தினேஷ், துணை ஆய்வாளர் சுரேஷ், முத்துக்குமாரசாமி, வட்டார விரிவுரையாளர் அம்சவல்லி, ஊர் நல அலுவலர் ராணி மற்றும் மகளிர் குழு உறுப்பினர்கள் உதவியுடன்  ஒரே நாளில் 3 சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தியதால்  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தண்டராம்பட்டு தாலுகாவை சுற்றி அதிக மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இதனால் தான் அதிக அளவில் குழந்தை திருமணங்கள் நடைபெறுகின்றது. இங்கு உள்ள பெற்றோர்கள் அணைவரும் படிப்பறிவு இல்லாதாலும்  வறுமை கோட்டிற்கு கீழ்  உள்ளனர். மேலும்  தற்போது கொரோனா தொற்று வைரஸ் அதிகரித்துள்ளதால் பள்ளிகளுக்கு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் வேலையின்மை காரணத்தாலும் வறுமை காரணத்தாலும் நடைபெறுகின்றது. இதனால் குழந்தைகள் வீட்டிலேயே உள்ளதாலும் இதுபோன்ற குழந்தை திருமணங்களை நடத்துகின்றன என்று கூறினர்.



"தண்டராம்பட்டு பகுதியிலுள்ள ஒரு சிறுமிகளிடம் கேட்டபோது" தண்டராம்பட்டு தாலுகாவிலுள்ள உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகிறோம். படித்து முடித்த பின்பு நீதிபதி மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ்  பணிக்கு செல்ல வேண்டும் என்று எங்களுடைய கனவு ஆனால் எங்கள் பகுதியில் வயது வந்து விட்டாலே போதும் சில வருடங்களிலே திருமணம் நடத்தி வைத்து விடுகின்றனர். எங்களுடைய பெற்றோர்கள் வீட்டின் வறுமையால் சாதிக்கும் நினைக்கும் எங்களின் ஆசை அனைத்தும் கனவாக மாறிவிடுகின்றது. நாங்களாவது எங்களுடைய திருமணம் எப்படியாவது தடுத்து நிறுத்தி கொள்ளலாம் என்று பார்த்தாலூம் யாரை சந்திப்பது யாருக்கு தொலைபேசி மூலம் அழைப்பது என்று தெரியவில்லை. ஆனால் சில நாட்கள் செய்திதாள்களில் குழந்தை திருமணம் சமூக நலத்துறை மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தி உள்ளனர் என்று  படித்து உள்ளோம் எங்களால் போலீஸ் ஸ்டேஷனுக்கு அல்லது அரசு அலுவலகத்திற்கோ செல்ல முடியாது நாங்கள் படிக்கும் காலங்களில் உள்ள சமூக நலத்துறை சார்பில் இந்த பகுதியில் குழந்தை திருமணம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வுகளும் மற்றும் அதற்கான போஸ்டர்கள், சிறிய பதாகைகளும் கிராமங்களில் வைக்கப்படுவதில்லை.


நாங்கள் யாரை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியாமல் தண்டராம்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சிறுமிகள் பெரும் அச்சத்தில் உள்ளோம். வரும் காலங்களிலாவது எங்கள் பகுதியில் உள்ள கிராமபுரங்களில் தூண்டு பிரசாரம் அல்லது பதாகைகளை வைத்தால் நாங்களே எங்களது திருமணங்களை தடுத்து நிறுத்துவோம் என தைரியத்துடன் இவ்வாறு அவர் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மாவட்ட கலெக்டர் குழந்தை திருமணத்தை தடுப்பதற்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென எதிர்பார்க்கின்றனர்.