வேலூர் மாவட்ட காவல்துறையில் துப்பறியும் நாய் படைப் பிரிவில் சிறப்பாகப் பணிபுரிந்த மோப்ப நாய் லூசி உயிரிழந்ததை அடுத்து, காவல்துறை மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.


மோப்ப நாய் லூசி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட காவல்துறையில் கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் கடத்தல் வழக்குகளில் திறம்பட செயல்புரிந்து, குற்றவாளிகளை கைது செய்ய உதவி புரிந்துள்ளது. "துப்பறியும் நாய் படைப் பிரிவில் மோப்ப நாய் லூசி 2012 முதல் 2022 வரை கடந்த 10 வருடங்களாக சிறப்பாக பணிபுரிந்து 2022 ஓய்வு பெற்றது. இந்த நிலையில் மோப்ப நாய் லூசி, வயது மூப்பு மற்றும் உடல் நலக் குறைவு காரணமாக  உயிரிழந்தது. 




 


தமிழக அளவில் நடைபெற்ற வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் 3 இடம் பெற்ற லூசி 


இதனையடுத்து, வேலூரில் உள்ள துப்பறியும் நாய் படை பிரிவு வளாகத்தில் மோப்பநாய் லூசியின் உடலுக்கு வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பி ரவிச்சந்திரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும், மோப்ப நாயுடன் பணிபுரிந்த காவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். லூசியுடன் இருந்த சக மோப்ப நாய்கள் லூசிக்கு வீரவணக்கம் செலுத்தியது. இந்த நிலையில், 2014-ஆம் ஆண்டில் தமிழக அளவில் நடைபெற்ற வெடிகுண்டு கண்டறிதல் பிரிவில் லூசி மூன்றாம் இடம் பெற்றதும், விவிஐபி பாதுகாப்பு பணி வெடிகுண்டு சோதனையில் சிறப்பாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.