ஆந்திரா மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர், உணவு கிடைக்காமல் ஆந்திரா வனப்பகுதியில் 12 யானைகள் கூட்டம் உணவை தேடி கிழக்கு தொடர்ச்சி மலை வழியாக திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் வந்து முகாமிட்டது. பின்னர் அந்த பகுதியில் உள்ள ஏராளமான விவசாய பயிர்கள் மற்றும் மலைவாழ் மக்களின் குடிசை வீடுகள் அனைத்தையும் சேதப்படுத்தியது. அதன் பிறகு அந்த யானை கூட்டத்தில் சில யானைகள் மின்சாரம் தாக்கியதில் பலியானது. அதன் பிறகு யானைகள் அனைத்தும் நகர்பகுதிக்கு உள்ளே வரத்துவங்கியது. மேலும் நகர்பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தையும் சேதப்படுத்தியது. அதைத்தொடர்ந்து சுமார் 6 யானைகளை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.
அப்போது இந்த யாணை கூட்டத்தில் இருந்து தவறி சென்றது. இதனால் அந்த யானையை பிடிக்க முடியவில்லை வயதான காராணத்தால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாக உள்ளதால் பெரும்பாலும் இந்த யானை காட்டுக்குள் செல்லாமல் நடுரோட்டில் நடந்து சென்று சாலையோரம் காட்டில் தங்குவதை வழக்கமாக கொண்டுள்ளது. ஒற்றை தந்தம் கொண்டுள்ள இந்த யானையால் ஜவ்வாதுமலையில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை ஜமுனாமரத்தூர் சுற்றியுள்ள காட்டுப்பகுதியில் வலம் வந்த இந்த யானை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திடீரென மலையை விட்டு வெளியேறியது.
பின்னர், திருப்பத்தூர் மாவட்டம் பேரணம்பட்டு, குடியாத்தம், ஆம்பூர் போன்ற இடங்களில் வலம் வந்த யானை யாருக்கும் தென்படவில்லை. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு ஒற்றைக் கொம்பன் யானை நேற்று முன்தினம் திடீரென ஜமுனாமரத்தூர் பகுதிக்கு வந்துள்ளது. நேற்று மாலை ஜமுனாமரத்தூர் ஊரிலிருந்து அரசு பேருந்து ஆலங்காயம் பகுதிக்கு பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் நடுவில் ஒற்றைக் கொம்பன் யானை வந்து கொண்டு இருந்தது. இதனைக் கண்ட ஓட்டுநர் பேருந்தை அப்படியே நிறுத்தி விட்டார். பின்னர் சாலையின் நடுவே நடந்துவந்து பேருந்தின் அருகே வந்த ஒற்றை கொம்பன் யானை அப்போது தும்பிக்கையை ஜன்னல் பகுதியில் தூக்கி பிளிறியது. இதனால் பயணிகள் அனைவரும் பயத்தில் நடுங்கினர். பேருந்தில் இருந்த நடத்துனர் பயணிகளிடம் யாரும் பயத்தில் கூச்சலிட வேண்டாம். இந்த யானை ஏதும் தொந்தரவு செய்யாது என்று கூறி பயணிகளை அமைதி காத்தார். அதன் பின்னர் கொம்பன் யானை பேருந்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்து நின்றது. ஆனால் பயணிகளை எந்த தொந்தரவும் செய்யவில்லை. இதனால் நிம்மதி அடைந்த பயணிகள் அவர்களுடைய தொலைபேசியில் யானையை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.
பின்னர் சில மணி துளிகளில் யானை சாலையிலிருந்து காட்டுப்பகுதி பார்த்து திரும்பியது இதனை பார்த்த பேருந்தின் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை இயக்கினார். சற்றுநேரம் அங்கு இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து வனத்துறை வனச்சரக அலுவலர் குணசேகரனிடம் பேசுகையில்;
இந்த ஒற்றை யானை 6மாத காலங்கள் மற்ற மாவட்டதிற்கு செல்லும் மற்ற 6 மாதங்கள் ஜமுனாமரத்தூர் பகுதிக்கு வரும் மேலும் இந்த யானைக்கு மிகவும் வயதாகிவிட்டதாகவும் தற்போது யானைக்கு கண்பார்வை குறைவாக உள்ளதால் , யானைக்கு காட்டு பகுதிக்குள் செல்ல தெரியவில்லை என்றும், மேலும் இந்த ஒற்றை யானை சாலை வழியாக செல்லும் என்றும், வனத்துறை சார்பில் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஒற்றை யானை வந்துள்ளதை பற்றி தகவல் தெரிவித்துள்ளோம் என்றும் திருப்பத்தூர், ஆலங்காயம் பகுதிக்கு செல்லக்கூடிய வாகன ஓட்டிகளிடம் மெதுவாகவும் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என்றும் யானையைக் கண்டு யாரும் அச்சப்படத் தேவையில்லை அதனை துன்புறுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளதாகவும், தற்போது யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் இந்த யானை இதுவரையில் வயல்களிலும் கிராமப்புறங்களில் சென்று சேதப்படுத்தியது இல்லை என்றும் தெரிவித்தார்.