PM Modi TN Visit: பிரதமர் மோடி வருகை; வேலூரில் போக்குவரத்து மாற்றம் ட்ரோன்கள் பறக்க தடை

வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் செய்கிறார்.இதனால் போக்குவரத்து மாற்றம்

Continues below advertisement

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து வேலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பிரச்சாரம் செய்கிறார். இதையொட்டி வேலூரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் பத்தாம் தேதி அதிகாலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குடியாத்தத்தில் இருந்து காட்பாடி வழியாக சென்னை செல்லும் கனரா வாகனங்கள்

குடியாத்தம் , வடுகதாங்கல் , காட்பாடி சித்தூர் பஸ்ஸ்டாப் , EB தட்டு ரோடு ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம்  

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூர்  செல்லும் வாகனங்கள்

சாத்து மதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு, கந்தேனேரி, பள்ளிக்கொண்டா, குடியாத்தம், பரதராமி வழியாக செல்ல சித்தூர் செல்ல  வேண்டும்.

திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக சென்னை செல்லும்  கனரக வாகனங்கள் 

சாத்து மதுரை, பென்னாத்தூர், ஸ்ரீபுரம் கூட்ரோடு  ,கந்தேனேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னைக்கு பயணிக்கலாம். 

சித்தூரில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும்  கனரக வாகனங்கள் 

நஹரிப்பேட்டை, EB கூட்ரோடு திருவலம், ராணிப்பேட்டை ஆற்காடு திமிரி ஆரணி வழியாக திருவண்ணாமலை செல்லலாம். 

சித்தூரில் இருந்து சென்னை செல்லும்  கனரக வாகனங்கள் 

நஹரிப்பேட்டை ,EB கூட்ரோடு திருவலம், ராணிப்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லலாம்.

சித்தூரில் இருந்து வேலூர் வழியாக பெங்களூர் செல்லும்  கனரக வாகனங்கள் 

கிறிஸ்டியன் பேட்டை காட்பாடி குடியாத்தம் ரோடு சந்திப்பு குடியாத்தம் வி கோட்டா வழியாக பெங்களூர் பயணிக்கலாம். 

மேற்கண்ட வழிகளில் பயணிக்கும் கனரக வாகன ஓட்டுநர்கள் வாகன நெரிசலை தவிர்க்க முழு ஒத்துழைப்பை அளிக்குமாறும் மேலும் பொதுமக்கள் தங்கள் பயணிக்கும் திட்டத்தை அதற்கு ஏற்றார் போன்று மாற்றி அமைத்துக் கொண்டு பயணம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement