Continues below advertisement

ஆம்பூர் அருகே தனியார் உணவகத்தில் பணியாற்றும் வடமாநில இளைஞரின் பிறப்பு உறுப்பை வளர்ப்பு நாய் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் உணவகத்தில், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ஷெரிப் என்பவர்  சமையல் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் அதிகாலை கழிவறை செல்வதற்காக வந்தார். அப்போது, உணவகத்தில் மின்சார காரிற்கு  சார்ஜ் போட வந்த நபரின் இரண்டு வளர்ப்பு நாய் ஷெரிப்பை பார்த்து ஆக்ரோஷமாக குரைத்துள்ளது.

Continues below advertisement

பின்னர் ஒரு நாய் ஆக்ரோஷமாக ஓடிவந்து அங்கு ஓரம் நடந்து சென்றுக்கொண்டிருந்த ஷெரிப்பை ஆக்ரோஷமாக பிறப்புறப்பில் கடித்துள்ளது. இதில் ஷெரிப்பின் பிறப்புறுப்பில் நாயின் பற்கள் இறங்கியதால், அவருக்கு படுகாயம் ஏற்பட்டு, அதிக அளவு ரத்தம் வெளியேறியுள்ளது.

உடனடியாக அவரை சக பணியாளர்கள் மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

மேலும், நாயின் உரிமையாளர் மீது ஷெரிப் ஆம்பூர் கிராமிய காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஷெரிப்பை நாய் ஆக்ரோஷமாக கடித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரேபிஸ் நோயின் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு

நரம்பு மண்டல பாதிப்பு: ரேபிஸ் வைரஸ் மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து, மூளையில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதுவே நோயாளியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும்.

உயிரிழப்பு: காய்ச்சல், தலைவலி, குழப்பம், வாந்தி போன்ற அறிகுறிகள் ரேபிஸ் நோயின் அறிகுறிகளாகும். இதனால் சிகிச்சை அளிப்பது கடினம். அப்போது, உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

தடுப்பு: நாய் கடித்தவுடன் உடனடியாக டாக்டரிடம் சென்று தடுப்பூசி மற்றும் ரேபிஸ் தடுப்பு ஊசி போட்டுக்கொள்வது உயிரிழப்பைத் தடுக்க உதவும். 

முக்கியத்துவம்

ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட விலங்கு கடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். சரியான நேரத்தில் மருத்துவ சிகிச்சை அளித்தால், நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்கலாம்.