திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காயம்பட்டு ஊராட்சியில், ஊராட்சி செயலாளராக பணியாற்றி வரும் ஸ்ரீ தேவி, அதே ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வரும் இந்திரா தனது 2017 முதல் 2020 வரை 32 மாதத்திற்கான சம்பள நிலுவைத் தொகை ரூபாய் 24,940 வழங்க வேண்டுமென ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.




தனக்கு 5 ஆயிரம்  லஞ்சம் கொடுத்தால் தான் கையெழுத்திட்டு காசோலை வழங்கப்படும் என ஊராட்சி எழுத்தர் கூறியுள்ளார். இந்த நிலையில் தன்னிடம் உள்ள 2,000 ரூபாய் மட்டும் தருகிறேன் என தூய்மைப் பணியாளர் இந்திரா தெரிவித்துள்ளார், அதற்க்கு  ஒப்புகொள்ளாத ஊராட்சி செயலாளர் ஸ்ரீ தேவி,  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தேவையான பணம் கொடுத்தால் மட்டுமே தங்களின் நிலுவை தொகை மனு ஆவண செய்யப்படும் இல்லையென்றால் உடனடியாக செய்ய முடியாது என கூறியுள்ளார்.




இதனைத் தொடர்ந்து இந்திரா திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலரிடம் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், இந்திராவிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஸ்ரீ தேவியிடம் அனுப்பியுள்ளனர். அப்பொழுது தனது வீட்டில் இருப்பதாகவும் தனது வீட்டிற்கு ரூபாய் ஐந்தாயிரம் எடுத்து வர வேண்டும் என தெரிவித்ததைத் தொடர்ந்து அருள் பிரசாத், அன்பழகன் யுவராஜ், மைதிலி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு குழுவினர் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து ஸ்ரீதேவி மீது வழக்குப்பதிவு செய்தனர்,




இதைத்தொடர்ந்து  திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் ஊராட்சி செயலாளர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்த சம்பவம் தற்போது, அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அரசு துறைகளில் லஞ்சம் கேட்டு


லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்ட காயம்பட்டு ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி இரண்டு கைகளாலும் எழும் மிரர் ரைட்டிங்கில் கடந்த 2019-ம் ஆண்டு கின்னஸ் சாதனை படைத்து அப்போதைய திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி கையால் சான்று பெற்றது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி அந்த கிராம பகுதியில் பெருமைக்குரிய விருது பெற்று பெருமை சேர்த்த இந்தபெண்மனி இப்போது எங்கள் கிராமத்திற்கு இது போன்ற அவநம்பிக்கை பெயரை வாங்கியுள்ளது எங்களுக்கு பெரும் அவமானமாக உள்ளது என அப்பகுதி கிராம மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது பொதுமக்கள் எந்த நேரத்திலும் புகார் செய்யலாம். புகார்களை மொபைல் ஃபோன் எண்: 94450 48873, காவல் ஆய்வாளர் மொபைல் எண் 94450 48928யை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.