பருவதமலை ஏறும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு பக்தர் உயிரிழந்த சோகம்

கலசப்பாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலத்தில் உள்ள பருவதமலை ஏறும் வழியில் ஏற முடியாமல் மூச்சு திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.

Continues below advertisement

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகாவிற்கு உட்பட்ட தென் மகாதேவமங்கலம், கடலாடி கிராமத்திற்கு இடையே மிகவும் பிரசித்தி பெற்ற தென் கைலாயம் என்று அழைக்கப்படும் பருவதமலை அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 4 ஆயிரத்து 568 உயரம் கொண்ட மலை உச்சியில் மல்லிகார்ஜுனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. பருவத மலைக்கு பௌர்ணமி மற்றும் வார விடுமுறை நாட்களில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் , வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு நேற்று முன்தினம் மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

 


அதனைத் தொடர்ந்து பக்தர்கள் பருவதமலைக்கு வந்து கொண்டு வண்ணம் உள்ளனர். இதனால் மலையில் பாதுகாப்பு பணிகளும் ஏற்படுத்தபட்டு இருந்து, நேற்றில் இருந்து பௌர்ணமி தொடங்கியது. இதனால் பர்வத மலைக்கு தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது . இதில் தூத்துக்குடியை சேர்ந்த பொன்னுசாமி வயது (40) என்பவர் தூத்துக்குடியில் உள்ள துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பாமாருக்மணி வயது (31) இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அதில் ஒரு ஆண் குழந்தை அவரது பெயர் சரவணன் வயது (6) ஒரு பெண் குழந்தை அவரது பெயர் ஸ்ரீ வயது (2) குழந்தைகள் உள்ளது. பொன்னுசாமி என்பவர் அவருடைய உறவினர்கள் நான்கு நபர்களுடன் இவர் திருக்கார்த்திகை தீபத்தை பார்ப்பதற்காக வந்துள்ளார்.


 

அப்போது அவர் மாலை 6 மணியளவில் மலை உச்சிக்கு நடந்து சென்றார். அப்போது மலை உச்சியின் அருகாமையில் பொன்னுசாமி சென்றபோது அங்கு உள்ள ஏணிப்படி மீது செல்லும் பொழுது அவருக்கு ஏறுவதற்கு சற்று பயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இரண்டு படி ஏறிய பிறகு உடனடியாக என்னால் ஏற முடியவில்லை என்று பொன்னுசாமி அவருடைய உறவினர்களிடம் கூறிவிட்டு உடனடியாக  கீழே இறங்கியுள்ளார். பின்னர் கீழே வேகமாக இறங்கிய பொன்னுசாமிக்கு பயத்தில் அதிகமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உறவினர்களிடம் பேச்சு கொண்டு இருக்கம்போத நெஞ்சில் கையை வைத்தவாறு கீழே மயங்கி வீழ்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. அப்போது காவல்துறையினர் வட்டாரத்தில் கேட்டபோது மலை ஏறும்பொழுது உச்சியில் செல்லும்பொழுது பயம் ஏற்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டு தான் உயிரிழந்தார் என்பது தெரிய வருகிறது என்று கூறினார்கள்.

Continues below advertisement