நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமுதப் பெருவிழாவாக இந்த ஆண்டு முழுவதும் மத்திய அரசு கொண்டாடி வருகிறது. அதன் அடிப்படையில் இல்லம் தோறும் தேசியக்கொடியை ஏற்றி பொதுமக்கள் தங்கள் தேச பக்தியினை வெளிப்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையில் தங்களது இல்லங்களில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மத்திய அரசு நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள் போன்றவை இல்லம் தோறும் தேசியக்கொடியை பொதுமக்கள் இந்த 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் ஏற்ற வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.


 




அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பட்டாங்குளம் கிராம பகுதியில் உள்ள துளிப் பன்னாட்டு பள்ளியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் விழா நடைபெற்றது. மேலும்  பிரதமர் நரேந்திர மோடி இந்தாண்டு 75வது சுகந்திர விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் மூன்று நாட்கள் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன் ஒரு பகுதியாக ஆரணி அருகே பட்டாங்குளம் கிராம பகுதியில் உள்ள துளிப் பண்ணாட்டு பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஒன்றினைந்து பள்ளி வளாகத்தில் ஒரே இடத்தில் சுமார் 750 பள்ளி மாணவ, மாணவிகள் தனித்தனியாக 750 தேசியக்கொடியை ஏற்றி வைத்து உலக சாதனை புரிந்துள்ளனர்.


 




இந்த உலக சாதனையை "கலாம் புக் ஆப் ரெக்கார்ட்" பதிவு செய்து சாதனை புரிந்த பள்ளி நிர்வாகத்துக்கு சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. இந்த சுதந்திர தின விழாவில் எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் தனித்தனியாக தேசியக்கொடி ஏற்றி அதன் மூலம் மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தனர். மேலும் இந்த உலக சாதனை ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றி உயிர் தியாகம் செய்த மறைந்த வீரர்களுக்கு சமர்பிப்பதாக பள்ளியில் பயிலும் மாணவர்கள் தெரிவித்தனர். இதில் பள்ளி மாணவ,மாணவிகள் ஆசிரியர்கள் என பலர் தங்களுடைய வீடுகளிலும் தேசிய கொடியினை ஏற்றி உள்ளனர்.


சாக்லேட் கொடுத்து 1ம்வகுப்பு மாணவி கடத்தல்...திருவண்ணாமலையில் பரபரப்பு..!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண