திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள கலைஞர் திடலில் கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். துணை சபாநாயகர் பிச்சாண்டி முன்னிலை வகித்தார். மாவட்ட அவை தலைவர் வேணுகோபால் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நூறு மூத்த நிர்வாகிகளுக்கு பொற்கொழியும் 10 ஆயிரத்து 100 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.
இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டம் திமுக கோட்டை என மீண்டும் மீண்டும் நினைவூட்டி காட்டுகின்றது. இன்று தமிழ்நாடு நாள் 1968-ஆம் ஆண்டு ஜூலை 18-ம் நாள் தான் அண்ணா நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டினார். தமிழ்நாடு என்ற பெயர் சிலர் தற்போது எதிர்பது போன்று அன்றும் எதிர்த்தார்கள் இன்னைக்கும் தமிழ்நாட்டை அண்ணாதுரை தான் ஆண்டு கொண்டு இருக்கிறார். குறிப்பாக ஆளுநரே தமிழ் நாடு என கூடாது என்று கூறுகிறார். நாங்கள் அந்த பெயரை மாற்றா விடமாட்டோம், அதிமுக ஆட்சி இருந்தால் நாமது மாநிலத்தின் பெயரை மாற்றி இருப்பார்கள் என்று தெரிவாத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் எப்போதும் திமுகவுக்கு பக்கபலமாக இருக்கும் மாவட்டம் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இந்த மாவட்டத்திற்கும் உள்ள தொடர்பை கூற விரும்புகிறேன். 1963ஆம் ஆண்டு திருவண்ணாமலை சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் ப.உ. சண்முகம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 25 நாட்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார். அவரது பணியால் உ.சண்முகம் பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருவண்ணாமலை இடைத்தேர்தல் தான் திமுகவுக்கு திருப்புமுனை தந்தது. திருவண்ணாமலையின் வெற்றிதான் 1967-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க காரணமாக அமைந்தது. அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்கியதும் ஆட்சியர் அலுவலகம் உருவாக்கியதும் முன்னாள் முதல் கலைஞர்தான்
ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தையும் முதன் முதலில் திருவண்ணாமலை மண்ணில் தான் துவங்கினார், நமது தேர்தலின் வெற்றியே திருவண்ணாமலை பிரச்சாரத்தில் தான் ஆரம்பித்தது. திருவண்ணாமலைக்கும் நமது கழகத்திற்கும் எப்படிப்பட்ட உறவு என்று கூறியுள்ளேன். கலைஞருடைய நூற்றாண்டு விழாவை பிரம்மாண்டமாக இதைவிட சிறப்பாக எந்த மாவட்டத்திலும் நடத்த முடியாது. கழகத்தின் நடைபெறக்கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி யாரை அழைத்தாலும் சரி ஆனால் என்னை அழைக்க வேண்டும் என்றால் மூத்த முன்னோடிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளேன். மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்க வேண்டு என்று கூறினேன். கலைஞர் 5 முறை முதல்வராக இருந்ததற்கு காரணம் கழகத்திற்கு உழைத்த மூத்த முன்னோடிகள் தான் காரணம் தற்பொழுதும் முதல்வராக பதவி ஏற்றதற்கு உழைத்ததும் மூத்த முன்னோடிகள் தான் காரணம்.
திருப்பத்தூர் பொறுப்பு அமைச்சராக இருக்கும் நிலையில் எவ்வளவு சிறப்பாக நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். திமுகவின் ஆட்சியைப் பார்த்து இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கட்சிகளும் வரவேற்கின்றனர் இந்தியாவிலேயே நம்பர் ஒன் முதல்வர் என ஸ்டாலினை பாராட்டுகின்றனர். இதைத்தான் பாஜகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது திமுகவை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி என்றால் தான் தமிழ்நாட்டிற்குள் பாஜகாவால் வரமுடியும் என்று நினைக்கிறார்கள். எங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் வலுவாக இருக்கிறதோ அங்கெல்லாம் பாஜக அமலாக்கத் துறையை வைத்து மிரட்டுகின்றனர். திமுகவிற்கு பல அணிகள் இருக்கிறது இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி என உள்ளது. அதிமுகவில் பல அணிகள் உள்ளது ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி, சசிகலா அணி, டிடிவி தினகரன் அணி, ஜெ தீபா அணி, ஜெ தீபா டிரைவர் அணி என பல அணிகள் இருக்கின்றது.
ஆனால் பாஜகவிடம் இருக்கக்கூடிய அணி இன்கம் டேக்ஸ் அணி சிபிஐ அணி தன்னுடைய அணிகளான அமலாக்கத்துறை சிபிஐ வைத்து சோதனை இட்டு வருகிறது. கடந்த மாதம் செந்தில் பாலாஜியை மிரட்டினார்கள் எதுவும் கிடைக்கவில்லை, இப்போது அமைச்சர் பொன்முடி வீட்டில் சோதனை இட்டு வருகிறார்கள். இங்கு ஆண்டு கொண்டு இருப்பது பழனிசாமியோ, பன்னீர் செல்வமோ கிடையாது. தமிழ்நாடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நாங்கள் திமுக தொண்டர்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம் உங்கள் அமலாக்கத்துறைக்கும் பயப்பட மாட்டோம் எங்களது கிளைச்செயலாளர்கள் கூட பயப்பட மாட்டார்கள் தமிழ்நாட்டு மக்கள் எப்படி 2021 தேர்தலில் அடிமைகளை விரட்டி அடித்தோமோ அதே போல் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவை விரட்டி அடிப்போம்.இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.