வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் பிரிவு மற்றும் வைட்டல் தனிப்பிரிவுஸஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் 13வது பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்று,1 01மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளிக்கையில், “2016-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை. ஆனால் 2017 -ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு வந்த பிறகு தான் நீட்டு உள்ளே வந்தது. இந்த நீட் தேர்வு வருவதற்கு முழு காரணமே எடப்பாடி பழனிசாமி தான். நீட் தேர்வால் 21 மாணவர்கள் உயிரிழப்புக்கு காரணம் எடப்பாடி பழனிசாமி தான். நீட் தேர்வு தமிழகத்திற்குள் நுழைந்ததற்காக ஏதோ ஒரு காரணத்தை எடப்பாடி பழனிசாமி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.


 




 


நீட் எப்போது யாரால் வந்தது என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். 2011-ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நுழைவுத் தேர்வு வந்த போது அதனை தடுத்து நிறுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இதற்காக அவர் நீதிமன்றம் சென்று தடையானை பெற்றார். அதன் வழியில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றவுடன் நீதியரசர்‌ ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்து அளிக்கும் பரிந்துரையின் பேரில் நீட் தேர்வு விலக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவையெல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு நன்கு தெரியும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மருத்துவத் துறையில் பல்வேறு சாதனை படைத்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் குழந்தை திருட்டு குறித்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேலூர் அரசு மருத்துவமனையில் குழந்தை திருட்டின் போது கவன குறைவாக இருந்த தற்காலிக பணியாளர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது அந்த வார்டில் பணியில் மருத்துவ பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் எடுத்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


 




 


நடப்பு நிதி ஆண்டில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டமான ஒவ்வொரு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் புற நோயாளிகளின் பிரிவு நுழைவு வாயிலில், வைட்டல் பெ என்ற தனிப்பிரிவு துவக்கப்பட்டுள்ளது முதன்முதலாக வேலூரில் இன்று துவக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி கல்லூரி மருத்துவமனைகளிலும் விரைந்து செயல்படுத்தப்படும். இந்த திட்டமானது நுழைவவாயிலில் நுழையும் அனைத்து நோயாளிகளுக்கும் எடை அளவு உயரம் நாடித்துடிப்பு. நடுக்கை சுற்றளவு சுவாச வீதம் ரத்த அழுத்தம் ரத்த சோகை சர்க்கரை உள்ளிட்ட பல நோய்களுக்கு அளவீடு செய்யப்பட்டு மருத்துவர்கள் பார்ப்பதற்கு முன்பாகவே நோயாளிகளின் பரிசோதனைகளின் அடிப்படையில் முதலில் அறிக்கை அவர்களிடம் தரப்படும். இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு விரைந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக தற்போது தமிழகத்தில் துவக்கப்பட்டுள்ளது” என்றார்.


 




பின்னர் பட்டமளிப்பு விழாவில் பேசிய அமைச்சர், “கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவத் துறையில் வெளிப்படுத்தன்மையாக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 1021 மருத்துவர்களும் 983 மருந்தாளுனர்களும், 1066 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில்5 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவரவர்களுக்கு தகுந்த வகையில் மதிப்பெண் அளிக்கப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.