திருவண்ணாமலை மாவட்டம் போளுர் ஊராட்சிக்குட்பட்ட இந்திராவனம் கிராமத்தில சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக அதிமுகவை சேர்ந்த ராஜேஸ்வரி வயது (46) என்பவர் இருந்து வருகிறார். இவருடைய மாமனார் ஏழுமலை 65 இவர் ஏற்கனவே தலைவராக பதவி வகித்துள்ளார். தற்பொழுது இவர் அதிமுக வடக்கு மாவட்ட ஒன்றிய துணைச்செயலாளராக உள்ளார். தற்பொழுது அவர்தான் ஆக்டிங் ஊராட்சி தலைவராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஊராட்சி செயலராக குப்புசாமி என்பவர் பதவி வகித்து வருகின்றார். மேலும் இந்திரவனம் கிராமத்திற்கு 2022-23 மத்திய அரசின் நிதி குழுவில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் இந்திரா கிராமத்தில் உள்ள 110 குடியிருப்பு வீடுகளுக்கு குடிநீர் புதிய இணைப்பு குழாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 52 வீடுகளுக்கு  3 லட்சத்து 69 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ப்பட்டது. வீடுகள் முழுவதும் தண்ணீர் குழாய் இணைப்பு பணியை செய்ய டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் பாரதி என்பவர் எடுத்துள்ளார். அதனை சப் கான்ட்ராக்டர் அன்பு என்பவர் பணியை எடுத்து பணியாற்றி வருகிறார். 


 






 


இந்த திட்டத்தின் மூலம் டேங்கிலிருந்து புதிய பைப் லைன் அமைத்து புதியதாக சிமெண்ட் பில்லர் அமைத்து அதில் குடிநீர் குழாய் பொருத்தி தண்ணீர் வீடுதோறும் வருமாறு அமைக்க வேண்டும். ஆனால் இந்த பஞ்சாயத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் டேங்க்கில் இருந்து தெருக்களில் பொதுக் குழாய் அமைக்க பொருத்தப்பட்ட பைப் லைன் மூலமாக இதற்கு முன்பு பஞ்சாயத்திற்கு பணம் கட்டி வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு பெற்றவர்களின் வீட்டுல் புதியதாக குடிநீர் பைப் வழங்கியது போன்றும், குடிநீர் குழாய் இணைப்பு பெறாதவர்களின் வீட்டில் செட்டாப் பில்லர் 2 அடி நீளமுள்ள குழாய்யை அரை அடி ஆழம் தோண்டி இணைப்பு அமைத்து போன்றும் அதனை புகைப்படங்கள் எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பி பணம் பெற திட்டுமிட்டுள்ளனர்.


இந்தநிலையில் அதே கிராமத்தை முரளி என்ற இளைஞர் கிராமத்தில் உள்ள போலியாக இணைக்கப்பட்ட குடிநீர் குழாயை வீடியோ எடுத்து அவருடைய வலைதள பக்கதில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வளைதலங்களில் வைரலாகி வருகிறது. இதனால் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர் ஆகியோருக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் எதிரொலியாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவின் பேரில் சேத்பட் வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபல் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று புதியதாக குடிநீர் குழாய் இணைப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


 




 இதுகுறித்து சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்திடம் பேசியபோது; 


அந்த கிராமத்தில் அப்படி முறைகேடு ஏதும் நடக்கவில்லை. இப்போதுதான் பணியை தொடங்கி பைப் லைன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். தற்காலிகமாக அப்படி வைத்துவிட்டு. அதை பைப் லைன் போடுவதற்காக வைத்துள்ளனர். இப்போதுதான் பைப்லைன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பதில் கூறினார். மேலும் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியம் இந்திராவனம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய பைப் லைன் பற்றி தவறான முறையில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட முரளி மீது நடவடிக்கை எடுக்க கோரி சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சேத்துப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.