திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேட்டரி செல் விழங்கிய 2வயது குழந்தை உணவு குழாயில் இருந்து அறுவை சிகிச்சை இன்றி அகற்றி மருத்துவர்கள் சாதனைப் படைத்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா ரெட்டியார் பாளையம் அருகே உள்ள மேல்கப்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைமுருகன், விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு 2 வயதில் லித்திக்சரண் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் இந்த குழந்தை லித்திக்சரண் குழந்தைகள் இயக்கும் பொம்மை கார்களை இயக்குவதற்கான ரிமோட்டில் பயன்படுத்தும் வட்ட வடிவலான செல்லை வீட்டில் கையில் வைத்துக்கொண்டு விளையாடி கொண்டிருந்தான்.
பின்னர் குழந்தையின் கையில் பேட்டரி செல் இல்லாததை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வீடு முழுக்க பேட்டரி செல்லை தேடி பார்த்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை, இதனால் குழந்தை பேட்டரியை விழங்கி இருக்குமோ என்ற எண்ணத்தில், குழந்தைக்கு தண்ணீர் கொடுத்துள்ளனர். ஆனால் குழந்தையால் தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்துள்ளது.
அதன் பிறகு குழந்தை பேட்டரியை விழங்கியது தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அவர்கள் உடனடியாக சிறுவனை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தனர். பின்னர் உடனடியாக மருத்துவர்கள் குழந்தையை எக்ஸ்ரே செய்து பார்த்தபோது தொண்டையில் உணவுக்குழாய்க்கும், மூச்சுக்குழாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் பேட்டரி சிக்கியது தெரியவந்தது. அதன் பிறகு அறுவை சிகிச்சை பிரிவிக்கு குழந்தையை அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து காது, மூக்கு, தொண்டை துறைத் தலைவர் இழஞ்செழியன் தலைமையில் மருத்துவர் கமலக்கண்ணன், மயக்கவியல் துறைத்தலைவர் பாலமுருகன், மயக்கவியல் நிபுணர் பாலகிருஷ்ணன் மற்றும் மருத்துவக்குழுவினர் குழந்தையின் தொண்டையில் சிக்கிய வட்டவடிவ பேட்டரியை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிறுவனுக்கு மயக்க மருந்து அளித்து அறுவை சிகிச்சையின்றி லாரிங்கோஸ்கோபி என்ற முறையில் வட்டவடிவலான பேட்டரியை அகற்றினர்.
தற்போது அந்த சிறுவன் நலமாக உள்ளார். துரிதமாக நடவடிக்கை எடுத்து சிறுவனின் தொண்டையில் சிக்கிய வட்டவடிவ பேட்டரியை அகற்றிய மருத்துவக்குழுவினருக்கு மருத்துவக்கல்லூரி டீன் திருமால்பாபு உள்பட மருத்துவர்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குழந்தை விழுங்கிய பேட்டரியை அகற்றாமல் இருந்து இருந்தால் உணவுக்குழாய் அரித்து அந்த பகுதி பெரும் பாதிப்புள்ளாகியிருக்கும், எந்த வித பாதிப்பும் ஏற்படாத வகையில் குழந்தையின் உணவுக்குழாயில் இருந்து துரிதமாக எடுத்துள்ளோம். குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு பொம்மை பொன்றவறை மட்டுமே அளிக்க வேண்டும். எளிதில் விழங்க கூடிய சிறிய பொருட்களை கொடுக்க கூடாது. குழந்தைகளை வீட்டில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அட்வைஸ் தெரிவித்துள்ளனர்.