தமிழகம் முழுவதும் அதிமுக கட்சி சார்பில் விடியா திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு,  மின் கட்டண வரி உயர்வு, பால் விலை உயர்வு சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றால் மக்களை வாட்டி வதைத்து வரும் விடியா திமுக அரசை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட போளூர் ஒன்றிய அலுவலகம் எதிரே  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழகச் செயலாளருமான ஜெயசுதா லட்சுமிகாந்தன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைச் செயலாளருமான


 




அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ கலந்துகொண்டு பேசியதாவது:


விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 18 மாதங்களில் மக்கள் பயன்பெறும் வகையில் எந்த ஒரு தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என்றும், அதற்கு மாறாக தற்போது தமிழகத்தில் நான்கு முதல்வர்கள் ஆட்சி செய்வதாகவும், ஸ்டாலின் வெரும் பொம்மை முதல்வராக செயல்படுவதாகவும், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை என்றும், தற்போது திறப்பு விழா கண்டு வரும் அனைத்து திட்டங்களும் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்து முடிவுற்ற பணிகளுக்கு மட்டுமே தற்போது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறப்பு விழா கண்டு வருகின்றனர்.


 




மேலும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என சிறிதும் யோசிக்காமல் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு என தொடர்ந்து மக்களை வஞ்சிக்கும் செயலில் விடியா திமுக அரசு ஈடுபட்டு வருவதாகவும், திமுகவில் கலைஞரின் குடும்பத்தை எடுத்து கொண்டால் கலைஞர் முதலை மைச்சராக இருந்த போது அவருடைம மகன் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயர், தமிழகத்தின் துணை முதல்வர் , கலைஞரின் மகள் கனிமொழி நாடாளுமன்றத்தின் உறுப்பினர், மருமகன் மாறன் மத்திய அமைச்சராக இருந்தார்.


 




தற்போது ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சர், உதயநிதியின் மகன் இன்பாநிதி அடுத்து திமுகவின் இளைஞர் அணியின் செயளாலராக பட்டம் ஏற்க  உள்ளார். இப்படி குடும்பமே விடியா ஆட்சி செய்து கொண்டு இருக்கும் இந்த ஆட்சிக்கு முடிவுகட்ட அனைத்து பொதுமக்களும் அதிமுகவிற்கு வருகிற நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதே போன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை,செய்யார், வந்தவாசி, செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விடியோ திமுக அரசுக்கு எதிராக கண்டன  கோஷங்களை எழுப்பினர்.