திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே அம்மனி அம்மன் மடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றம் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நேற்று காலை காவல்துறையினர், வருவாய்த் துறையினர், கோவில் ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் முன்னிலையில் 23 ஆயிரத்து 800 சதுர அடி நிலப்பரப்பு ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து மீட்கப்பட்டது. மேலும் அம்மனி அம்மன் கோபுரம் எதிரே சுமார் 400 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க அம்மனி அம்மன் மடம் இருந்து வந்தது.
இந்த மடத்தில் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் இரவு நேரத்தில் தங்கி உணவு உட்கொண்டு நீராடி அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து வழிபட்டு செய்து வந்தனர். இந்த அம்மனி அம்மன் மடத்தையும் அறநிலைத்துறை அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து வந்தனர். அப்போது அங்கு இந்து மக்கள் கட்சியினர் திடிரென அங்கு வந்து அம்மனின் மடத்தை இடிக்க கூடாது என போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு இருந்து ஜேசிபி இயந்தரத்தை எடுத்து சென்றனர். அதன் பிறகு இந்து முன்னணி கட்சியினர் கலைந்து சென்றனர். அதனைத்தொடர்ந்து (19.03.2022) அன்று காலையில் மீண்டும் அறநிலையத்துறை அதிகாரிகள் அம்மணி அம்மன் மடத்தை இடிக்க நடவடிக்கை எடுக்க வந்தனர். அப்போது அகற்றப்பட்டு இருக்கும் நேரத்தில்
இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்த பாஜக நிர்வாகி சங்கர் மற்றும் அவரது கூட்டாளிகளான செங்கத்தைச் சேர்ந்த அஜித்குமார், கீழ்நாத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தேனிமலை பகுதியைச் சேர்ந்த காளியப்பன், ஏழுமலை, கார்த்தி ஆகியோர் அம்மணி அம்மான் மடத்தின் மீது ஏற்றிக் கொண்டு பணிகளை செய்யவந்த அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் விமர்சித்தும், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாம் தடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அண்ணாமலையார் திருக்கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரேசன் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நகர காவல் துறையினர் வழக்கு பதியப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் தேனிமலையைச் சேர்ந்த காளியப்பன் ஏழுமலை கார்த்தி ஆகிய மூன்று நபர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பித்து சென்ற பாஜக ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில துணைத்தலைவர் சங்கர் உள்ளிட்ட மூன்று பேரை காவல்துறையினர் தீவிரமாக வலை வீசி தேடி வருகின்றனர்.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.