திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் சாஸ்திரியார் ,அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி இங்கு இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் சுமார் 5000-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். அதேபோன்று இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரிய, ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். தற்பொழுது தமிழகம் முழுவதும் ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழ்நாடு அரசு 1-ஆம், முதல் 8-ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு தடை விதித்துள்ளது. ஆனால் 9-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அரசு நெறிமுறைகளை பின்பற்றி ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பு முதல் 10 மற்றும் 11,12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சுழற்சி முறையில் வகுப்புகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 150 மாணவ மாணவிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் கொரோனா பரிசோதனை மாதிரிகள் பள்ளியிலேயே செய்யப்பட்டது. மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்பட்ட சலி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து பரிசோதனை முடிவுகள் தமிழ்நாடு அரசு மற்றும் சுகாதார துறையின் மூலம் வெளியிடப்பட்டும் நேற்று (05.012022)வெளியிடப்பட்ட பரிசோதனையின் முடிவில் இந்த பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளியின் தலைமை ஆசிரியர் 9ம் வகுப்பு முதல் 10 மற்றும் 11, 12ம் வகுப்பு வரையில் ஆகிய பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை உடனடியாக 2 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை அளித்து அனுப்பி வைத்தனர்.
உடனடியாக ஆரணி நகராட்சியின் மூலம் பள்ளியை சுற்றிலும், வகுப்பரைகளை கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்தனர். மேலும் கொரோனா பாதித்த மாணவர்களின் தொடர்பில் உள்ளவர்களிடமும் கண்டறிந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று பாதித்த மாணவர்களை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆரணியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசு சார்பில் நடவடிக்கைகளும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலமாக நடவடிக்கை மூலமாக நடவடிக்கை எடுத்தாலும், பொதுமக்கள் முழு மூச்சுடன் தற்காப்பை மேற்கொள்வதையும், முகக்கவசம் அணிவதையும், சானிடைசர் பயன்படுத்துவதையும், சமூக விலகலையும் கடைபிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும்