திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதன்படி அவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதை இடுப்பு பிள்ளையார் கோவில் அருகே கிரிவலபாதையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் 2022-23ன் கீழ் 1.9 கிலோ மீட்டா ரூ. 2.30 கோடி மதிப்பில் பேவர் பிளாக் பதிக்கும் பணி நடைபெற்று வருவதை சிறிது தூரம் நடந்து சென்று கொண்டிருந்தபோது நடப்பாதையில் இருந்த பொட்டிக்கடையின் அருகில் அதிக அளவில் குப்பைகள் அகற்றப்பாடாமல் இருந்தது. அதனை கண்ட ஆட்சியர் அங்கு சென்று கடைக்காரர்களிடம் பேசினார். 




 


அப்போது அதிகாரிகளிடம் கூறுகையில்;


நடைபாதையில் உள்ள கடைகளின் ஓரம் தான் அதிக குப்பைகள் குவிந்து கிடக்கிறது. கடைக்காரர்கள் குப்பைகளை அகற்றாமல் அப்படியே தேக்கி வைத்துள்ளனர். இதனால் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. தற்காலிகமாக கடைகள் வைத்துக்கொள்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் அவர்கள் நிரந்தரமாக வைப்பதால் தான் பிரச்சினைகள் எழுகிறது. நிரந்தரமாக கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்தால் அதை அகற்ற வேண்டும். நிரந்தரமாக கடைகள் வைக்க அனுமதிக்க கூடாது. தள்ளுவண்டியில் கடைகளை வைத்து வியாபாரம் செய்து கொள்ளலாம். அதேபோல் காலையில் தள்ளுவண்டியை கொண்டு வந்து பொருட்களை விற்பனை செய்து விட்டு இரவு நேரத்தில் தள்ளுவண்டியை அங்கிருந்து கொண்டு சென்றுவிட வேண்டும். அதற்கு மாறாக பலர் நிரந்தரமாக கடைகளை அமைத்து வருகின்றனர். இதை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். ஆக்கிரப்புகளை அகற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொண்டால் பலர் நிரந்தரமாக கடைகளை வைப்பதை தவிர்ப்பார்கள் என இவ்வாறு அவர் கூறினார்.


 




மாவட்ட ஆட்சியர் முருகேஷ் ஆய்வு 


வேங்கிக்கால் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் மாரியம்மன் கோயில் முதல் எழில் நகர் வரை முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23ன் கீழ் பக்ககவர் மற்றும் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதையும், அத்தியந்தல் ஊராட்சியில் கனிம வள நிதி திட்டம் 2022-23ன் கீழ் ரூ, 24 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும் ஆய்வு செய்து அருகே உள்ள காலி இடத்தில் காய்கறி தோட்டம் அமைக்கவும், தூய்மை வைத்திருக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், நேரில் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுத்தினார். இந்த ஆய்வின் போது திருவண்ணாமலை கோட்டப்பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருணாசலம், பிரிஹ்ராஜ். உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.