திருப்பத்தூரில் எங்க ஏரியாவுக்கு அன்னியர்கள் வராதீங்க நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் என சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதை நோட்டீஸ் அடித்து ஒட்டிய பொதுமக்கள்.

 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் அவ்வப்போது தொடர் திருட்டு மற்றும் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த திருப்பத்தூர் மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



 

இந்த நிலையில் சக்தி நகர் பகுதி மற்றும் அனுமந்த உபாசகர் பேட்டை பகுதிகளில் சில தினங்களாக மர்ம நபர் இரவு நேரங்களில் சுற்றி திரிவதாக சிசிடிவியில் காட்சிகள் பதிவாகியுள்ளன. அவர்களை எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் மேலும் அன்னியர்கள் உள்ளே வரக்கூடாது என்பதற்காகவும் தங்கள் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இரவு 11:30 மணியளவில் இருந்து காலை 5.30  மணி வரை வெளிநபர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது.

 

அப்படி மீறி உள்ளே வந்தால் அவர்களை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து அப்பகுதி மக்கள் நோட்டீஸ் ஒட்டி உள்ளனர். இந்த நோட்டீஸ் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.