திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் மக்கள் மனு குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்சியர் வளாகத்தில் கந்து வட்டி கொடுமையில் இருந்து தங்களை காக்க கோரியும் மற்றும் நிலம் அபகரிப்பு குப்பலிடம் இருந்து தங்களது நிலத்தினையும் மற்றும் தங்களையும் மீட்டு தரக்கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி,மகள் என மூன்று நபர்கள் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற நபர்கள் கூறியதாவது, திருவண்ணாமலை, மாவட்டம் தண்டராம்பட்டு தாலுக்கா தாணிப்பாடி பகுதியில் உள்ள க.வேலூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்நதவர் மணியின் மகன் கார்த்திகேயன் வயது (45) இவர் மனைவி சித்திரா இவர்களுடைய மகள் கவி ஆகியோர் வசித்து வருகின்றனர்.


இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த க. கார்த்திகேயன் என்பவரிடம் 50ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கியுள்ளார். ஆனால் 6 பைசா வட்டி என்று கூறி இதுவரையில் 36 ஆயிரம் ரூபாயை ம. கார்த்திகேயன் கட்டியுள்ளார். மீண்டும் 15 மாதங்கள் வட்டி பணம் கட்டவேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.




 


அதன் பிறகு ம.கார்த்திகேயேன் வட்டி பணம் கட்டவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக கூறி மிரட்டுகிறார் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தேன் ஆனால் காவல்துறையினர் இதைப்பற்றி விசாரிக்கமல் கந்து வட்டி க. கார்த்திகேயன் சாதகமாக பேசுகின்றனர் மற்றும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். மேலும் கந்து வட்டியினர் பணம் கொடுக்கவில்லை என்றால் உன்னுடைய நிலத்தை எழுதி கொடுங்கள் என்று மிரட்டியுள்ளனர். பின்னர் இதில் கந்து வட்டியினர் கும்பலுடன் சேர்ந்து வழக்கறிஞர் உன்னுடைய நிலத்தை எழுதி வைத்தால் 4 பைசா வட்டியாக குறைத்து கொள்ளுவார்கள் என்று தெரிவிக்கிறார் என்றும், கடந்த 4.03.20202 அன்று என்னுடைய வீட்டியனை கந்து வட்டி கார்த்திகேயன் பூட்டிக்கொண்டார்கள்.


மேலும் தனிப்பட்டி பகுதியில் கார்த்திகேயன் மற்றும் வழக்கறிஞரும் இருவரும் இணைந்து பல்வேறு நபர்களுக்கு குறைந்த வட்டி எனக்கூறி பணத்தை கொடுத்து அதிக வட்டிக்கு பணத்தை வசூல் செய்கின்றனர். அதில் என்னை போன்று பாதிக்கப்பட்டவர்களின் நிலங்களை அபகரித்து உள்ளனர்.




 


இந்நிலையில் காவல்துறையை சேர்ந்த க.கார்த்திகேயன் ஆதரவாக செயல்படுவதாகவும் தான் அளித்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் என்னை மிரட்டி வருவதாகவும் தனக்கு உரிய பாதுகாப்பு மற்றும் கந்து வட்டி தொல்லையில் இருந்து என்னையும் எங்களுடைய விவசாய நிலத்தை மீட்டு தரக்கோரி அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


மேலும் தீக்குளிக்க முயன்றவர்களை காவல்துறையினர் மீட்டு அவர்களின் மீது தண்ணீர் ஊற்றி பின்னர் விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதே போன்று தொடர்ச்சியாக வாரம்தோறும் தங்களுடைய பிரச்சனையை கூறி சிலர் தீக்குளிக்க முற்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது