திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்மா சிப்காட் அமைக்க வேளாண் விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் விவசாயிகள் திரள் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தேத்துரை பச்சையப்பன், எருமைவெட்டி தேவன் முன்னிலை வகித்தனர். சிப்காட் திட்டம் என்ற பெயரில் சுமார் 3012 ஏக்கர் விவசாய நிலங்களை தரிசு நிலம் என்று கூறி மேல்மா, தேத்துறை, நர்மாபள்ளம், குரும்பூர்,காட்டுக்குடிசை,வீரம்பாக்கம் நெடுங்கல், நர்மாபள்ளம், வடஆளப்பிறந்தான், இளநீர்குன்றம், அத்தி, மணிப்புரம் அய்யவாடி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய விளைநிலங்களை முற்றிலுமாக தமிழக அரசு கையகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதை கண்டித்து நடைபெற்ற விவசாயிகள் திரள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது; சீமான், தொழிற்சாலை அமைவதற்கு எதிரானவன் இல்லை. வேளாண் நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலை அமைப்பதைத்தான் எதிர்க்கிறேன். உலக நாடுகளில் மக்கள் எப்பொழுதாவதுதான் போராடுவார்கள். ஆனால் தமிழ் இன மக்களுக்கு போராட்டமே வாழ்க்கையாக உள்ளது. இப்பொழுதே விளை நிலங்களின் அளவு மிக குறைவு . அதை குறைத்துக் கொண்டே வருவது என்ன நியாயம். இங்கிருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் சிப்காட் உள்ளது. அதனால் என்ன வளர்ச்சி கண்டுவிட்டோம் வேளாண்மை என்பது தொழில் அல்ல அது நமது பண்பாடு. விமானத்தில் பறப்பது விஞ்ஞான வளர்ச்சி அல்ல. அதில் பயணம் செய்பவர்கள் பசி எடுத்தால் உண்பதற்கு என் விவசாயிதான் உழைக்க வேண்டும். 8 வழிச்சாலை என்பதை பயணநேர குறைப்பு சாலையாக பெயர்தான் மாறியிருக்கிறது. அந்த திட்டத்தை நிறுத்த வில்லை என்றால், எந்த ஒரு தொழிற்சாலையிலும் விளைபொருட்களை தயாரிக்க முடியாது. ஆனால் வேளாண்மை கைவிட்ட எல்லா நாடுகளும் பிச்சை எடுக்கின்றன. இலங்கையை போல இந்த நாடும் மாறும் சூழ்நிலை வந்துகொண்டிருக்கிறது. 28 கோடி மக்களுக்கு இரவு உணவில்லை. நீர் விற்பனைப் பண்டமாகியிருக்கிறது. விலங்குகள் அழிந்தால் மனிதகுலம் அழிந்துபோகும். அடர்ந்த காடுகள் அனைத்தும் பறவை நட்ட மரங்கள். மகரந்த சேர்க்கை எப்படி நடக்கிறது.
அதனால் தான் பூக்கள் மலர்கின்றன அதன் மூலம் காய் ஆகி அதனை விலங்குகள் உண்டு அதனை காடாக பரப்புகின்றன. சாலை வேண்டுமா வேண்டும். அதற்கு ஒற்றைத் தூண்களில் சாலைகள் நிற்கும் பிரேசிலை பார். நான் இருக்கும் வரை எட்டுவழிச்சாலைக்கு ஒரு செங்கல் கூட ஊன்ற முடியாது. நீ செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று. எனக்கு வாக்களிக்க வேண்டும். திராவிட மாடல் என்பது என்ன. பொதுவாக மாடல் என்பது இருக்கும். எதுவும் செய்யாது. என் நிலத்தை விட்டு நான் செல்ல மாட்டேன். உங்களுடன் இருப்பேன். படித்தவன் டாஸ்மாக்கில் சாராயம் விற்கலாம் விவசாயம் செய்யக்கூடாதா?. பிள்ளைகளின் தம்பி தங்கைகளுக்காதான் போராட்டம் இது உங்களின் போராட்டம் அல்ல. உங்கள் பிள்ளைகளின் போராட்டம் வருங்கால தம்பி தங்கைகளின் போராட்டம். விளை நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலைகள் அமைப்பது என்பதின் பெயரில் போலியாக செய்வதை அரசு கைவிட வேண்டும். ஜீ ஸ்கொயர் ஏராளமான நிலங்களை வாங்கிப் போட்டிருக்கிறார்கள். அதில் சிப்காட் தொழிற்சாலை கட்டுங்கள் இங்கு வேண்டாம்.
இந்தி திணிப்புக்கு எதிராக நவம்பரில் நாம் தமிழர் கட்சி சார்பாக போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு பேசினார். இதில், 8 வழிச்சாலை எதிர்ப்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம், மாநில உழவர் பாசறை சின்னண்ணன், திருமால், பிரகலதா, சீனிவாசன்.பச்சையப்பன், சோழன், பெருமாள், சாந்தி, கல்பனா அண்ணாதுரை ரேணுகா முருகன் வெங்கடேசன் பச்சையப்பன் ராஜப்பன் மகேஷ்குமார் செல்வராஜ் தனசேகர் முனுசாமி காசி சண்முகம் பாஸ்கர் சரவணன் உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏடிஎஸ் பி சவுந்தர்ராஜன்,டி எஸ் பிக்கள் த. கார்த்திக் செய்யாறு வெங்கடேசன் காவல் ஆய்வாளர்கள் வந்தவாசி விசுவநாதன், தெள்ளாறு கமல்ராஜ்தூசி குமார் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.