திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் பேரூராட்சியில் பகுதியில் கடந்த சில மாதங்களாக வீடுகளில் தொடர் நகை மற்றும் பணம் திருட்டு சம்பவம் அதிகளவில் நடைபெற்று வந்தது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் உத்தரவின் பேரில் கண்ணமங்கலம் காவல்நிலைய காவல்துறை காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டு வந்தனர். இந்நிலையில் இன்று கண்ணமங்கலம் பேருந்து நிலையம் புதுப்பேட்டை அருகே கண்ணமங்கலம் காவல் ஆய்வாளர் சாலமன்ராஜா தலைமையில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டு வந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர்களை மடக்கி பிடித்து வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் உள்ளதா என விசாரணை மேற்கொண்டனர்.



அப்போது அவ்வழியாக ஒரு வாலிபர் விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் லிப்ட் கேட்டு வந்த வாலிபர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணமாக பேசி பதட்டத்துடன் காணப்பட்டார். இதனால் சந்தேகமடைந்த கண்ணமங்கலம் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து காவலர்கள் வாலிபரிடம்  கிடுக்குபிடி விசாரணை செய்தனர். இந்த விசாரணையில்  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகன் (43) என்பதும் கண்ணமங்கலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் விசாரணையில் தெரிய வந்தன. அதுமட்டுமின்றி முருகன் வீட்டில் புகுந்து திருடுவதில் பலே கில்லாடி என்றும், இவர் திருடுவதற்கு முன்பு பலமுறை நோட்டம்மிட்ட பிறகே வீட்டில் இறங்குவாராம், இவர் அதிக அளவில் திருமணத்திற்கு அல்லது உறவினர்கள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு வீட்டை பூட்டிவிட்டு செல்பவர்கள் வீட்டில்தான் திருடுவாராம்.



அதிக அளவில் நகைகளை கொள்ளை அடிக்காமல்  குறைந்த அளவில் தான் திருடிச்செல்வார் என்றும் இதுவரையில் திருடிவிட்டு எங்கும் காவல்துறையிடம் சிக்கியது இல்லை என்றும் முருகன் மீது இதுவரையில் வழக்குகள் எதுவும் இல்லை என்றும் காவல்துறை வட்டாரத்தில் இவ்வாறு கூறுகின்றனர். பல நாட்களாக காவல்துறையினருக்கு ஆட்டம் காட்டிய பல திருடன் சிக்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து முருகனிடமிருந்து தாலி சரடு செயின் உள்ளிட்ட 10 சவரன் தங்க நகையை காவல்துறையினர் பறிமுதல் செய்து உரியவரிடம் பெறப்பட்ட நகையை கொடுக்க உரியவரை அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் முருகன் மீது வழக்கு பதிவு செய்து  ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.  கண்ணமங்கலம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடனை காவல்துறையினர் பிடித்தால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திருட்டு அச்சத்தில் இருந்து மீண்டு வந்துள்னர் மேலும் கண்ணமங்கலம் காவல்துறையினரை திருடனை பிடித்தால்  அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.