திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் பகுதியில் உள்ள ராஜாதோப்பு பகுதியில் காஞ்சிபுரம் பகுதியை சார்ந்த அன்னப்பூரணி அம்மா என்பவரின் ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த நிலையில், தனது 43-வது அவதார திருநாளையொட்டி அன்னபூரணி பக்தர்களை சந்தித்து ஆசி வழங்கினார். அப்போது பக்தர்கள் அன்னபூரணிக்கு மலர்களால் பூஜித்தும் பாத பூஜை செய்தும் வழிபட்டனர். இந்த நிகழ்வில் சில பெண்களுக்கு சாமி வந்தும் ஆடினர். அதில் ஒரு சிலர் கீழே விழுந்து தங்களுடைய கஷ்டங்களை கூறியும் அழுதனர். இந்நிகழ்விற்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த அன்னபூரணி;
இங்கு ஆசிரமம் அமைத்ததற்கு காரணம் மக்கள் அனைவருக்கும் முக்தி நிலை கொடுத்தும், அவர்களை கொண்டாட்டமாக வாழவைப்பதற்காக தான் என்றும், மக்கள் தன்னிடம் முழுமையாக என்னிடம் ஒப்படைத்து விட்டு சரணடைகிறார்களோ அவர்களுக்கான என்ன நோயாக இருந்தாலும், எந்தவித பிரச்சினையாக, இருந்தாலும் நான் சரிசெய்து ஜீவனோக்கு தன்மையில் நிலைபெற்ற வைப்பது தான்.
அடுத்தகட்டமாக ஆசிரமத்தை எந்த நிலைக்கு எடுத்து செல்லபோகிறீர்கள் என்ற கேள்விக்கு, இதை நான் தனிப்பட்ட முறையில் கொண்டு போவது இல்லை, என்னை எந்த சக்தி இயக்கிக்கொண்டு இருக்கிறதோ, அந்த சக்தி எப்படி கொண்டு போகுமோ அப்படி கொண்டு போகும். மக்கள் என்ன தேவைக்கு வருகிறார்களோ அந்த தேவையை நிவர்த்தி செய்வதற்கு தான் இயற்கை சக்தி செயல்பாடு இருக்கிறது. ஒரு யுகத்திற்கு ஒருமுறை அந்த சக்தி செயல்படும் என்றார்.
மக்களுக்கு எந்த மாதிரியான நோய்களை நிவர்த்தி செய்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு, எல்லா நோய்களையும் போன்மூலமாகவே, இதற்காக நேரில் பார்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்றார். ஆன்மீகம் என்பது உங்களை நீங்கள் உணரவேண்டும். அப்படி என்னை நம்பி வந்தவர்கள் தங்களின் வாழ்வில் உள்ள இன்னல்களில் இருந்து விடுபட்டு நலமுடன் உள்ளனர் என்றும், தன்னை உணர்ந்து தன்னிடம் தீட்சை பெற்றவர்கள் பல துன்பங்களில் இருந்து விடுபட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். அவர்களுடைய தன்மை என்னிடம் வந்து அவர்கள் சரணடைந்தால் அவர்களுக்கு ஏற்பட்ட நோய்களை ஒரு நொடியில் நீக்கிவிடுவேன் அதுவே எனக்கு அதிகம் என்றார்.
மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற மலேசியாவை சேர்ந்த பக்தர் கூறுகையில், நான் தொலைபேசியின் வாயிலாக அம்மாவிடம் பேசி தீட்சை எடுத்து கொண்டதாகவும், அதன்பின் தன்வாழ்வில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருந்த அனைத்து கஷ்டங்களும் படிபடியாக விலகியதாகவும், அவர்களை நம்புவர்களின் பிரச்னைகளை தீர்த்து வைக்கின்றார். உண்மையை தேடி அலைந்த போது எவரிடமும் கிடைக்காத நிலையில் இவரிடம் கிடைத்தது என்றும், எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் போனால் தான் அன்னபூரணி அம்மா என் சொல்ல வருகின்றார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும் என்றும் அதேபோல் இவர் அருள் வாக்கு சொல்பவர்கள் அல்ல, நாம் கஷ்டங்களுடன் வந்தால், இவர்களிடம் பேசிய போது மனது மிகவும் அமைதியாகி விடுகிறது என்று பக்தர்கள் தெரிவிரத்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்