பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ் பெற்றது அண்ணாமலையார் திருக்கோயில் ஆகும். இந்த கோயில் சுமார் 25-ஏக்கர் பரப்பளவில் நான்கு கோபுரங்கள் மற்றும் கட்டை கோபுரங்கள் என அழைக்கப்படும். ஐந்து சிறிய கோபுரங்களுடன் மொத்தம் 9 கோபுரங்களுடன் அண்ணாமலையார் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்பாக சோழர்கள், பாண்டியர்கள், ஹொய்சால மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் உள்ளிட்ட காலகட்டத்தில் இந்த திருக்கோவில் படிப்படியாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் பின்புறம் அமைந்துள்ள மலையே சிவனாக காட்சி அளிக்கிறார். கோயிலில் திரு கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. குறிப்பாக இக்கோயிலில் ஆயிரக்கணக்கான சிற்பங்களும், 450 கல்வெட்டுகளும் உள்ளன.
இக்கோயிலில் 100க்கும் மேற்பட்ட சந்நிதிகள் உள்ளன. இறைஉருவங்கள், செப்புத்திருமேனிகள், ஓவியங்கள், அழகிய திருச்சுற்றுகள், தீர்த்தக்குளங்கள், ஆயிரக்கால் மண்டபம், வானுயர்ந்த கோபுரங்கள் இக்கோயிலின் சிறப்புகள் ஆகும். 25 ஏக்கர் பரப்பளவில் மிகப்பிரமாண்டமாய் அமைந்துள்ளது இத்திருக்கோயில். கிருஷ்ணதேவராயர் கட்டிய கிழக்கு ராஜகோபுரம் 217 அடி உயரம், தமிழ்நாட்டில் இரண்டாவது உயரமான கோபுரம் ஆகும். இவை தவிர வல்லாள மகாராஜா கோபுரம், கிளிக்கோபுரம் ஆகியன சரித்திரம், அம்மனிஅம்மன் கோபுரம் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த கோபுரங்களாகும். அண்ணாமலையார் திருக்கோயிலின் வடக்கு பகுதியில் அம்மணி அம்மாள் கோபுரம் அமைந்துள்ளது. இந்த கோபுரம் சுமார் 17-ம் நூற்றாண்டில் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக வரலாறு உண்டு, இந்த கோபுரம் 171 அடி உயரம் கொண்டது.
இந்நிலையில் அண்ணாமலையார் சன்னதி அருகே உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் திருக்கல்யாண உற்சவம், நவராத்திரி பத்து நாள் உற்சவம் மற்றும் கார்த்திகை தீபத்தின் போது சாமி புறப்படுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறும். குறிப்பாக அண்ணாமலையார் திருக்கோயிலில் உள்ள மண்டபங்கள் மேற்கூரை உத்தரங்களில் பல்வேறு கலைநயம் மிக்க தொன்மை வாய்ந்த அழகிய மூலிகையின் மூலம் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். இந்த அழகிய ஓவியங்களை சிதைக்கும் வகையில் மற்றும் பக்தர்கள் வசதிக்கு என திருக்கோயில் நிர்வாகம் கோயிலில் பல இடங்களில் கோயில் கோபுரங்களில் திருக்கோவிலின் மதில் சுவற்றில் ஆணிகளை அடிப்பதும் உள்ளிட்ட பல்வேறு பக்தர்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என பக்தர்கள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
குறிப்பாக அலங்காரம் மண்டபத்தில் வரையப்பட்டுள்ள நடராஜர் மூலிகை ஓவியத்தின் முகத்தில் துளையிட்டு மின்விசிறி மாட்டியுள்ள சம்பவம் பக்தர்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலவித கண்டனங்கள் எழுந்த நிலையில் இதனை அறிந்த கோயில் நிர்வாகம் தற்போது அவசர அவசரமாக மின்விசிறியை அகற்றியுள்ளனர். இதே போன்று சென்ற வருடம் கார்த்திகை தீபத்திற்கு முன்பாக கோயிலில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்காக ஒரே கல்லால் செதுக்கப்பட்ட சிலையின் முகத்தை உடைத்து அதில் சிசிடிவி கேமரா பொறுத்தபட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியநிலையில் தற்போது நடராஜரின் மூலிகை ஓவியத்தின் முகத்தில் கோயில் ஊழியர்கள் துளையிட்டு மின் விசிறியை மாட்டி தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்களை செய்து வருகின்றனர். தற்போது வரையில் அவர்கள் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.