திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமனம் கஞ்சா, கள்ளச்சாராயம், ரவுடிசம், திருட்டு வழிப்பறி மற்றும் குற்றச்செயல்களை குறைக்க கடுமையான நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பேட்டியளித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பவன்குமார் ரெட்டி சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வந்த டாக்டர் கே.கார்த்திகேயனை திருவண்ணாமலை மாவட்ட 26-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் முதுகலை பல் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் ஒரு வருடம் பேராசிரியராகவும் பணியாற்றியும் வந்துள்ளார். அதன் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு ஐ.பி.எஸ். முடித்து கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக பயிற்சியும் பெற்று வந்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து சென்னை ஸ்ரீபெரும்புதூர் உதவி காவல் கண்காணிப்பாளராகவு பணிபுரிந்து வந்துள்ளார். தொடர்ந்து சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து. தற்போது அங்கிருந்து மாற்றப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இன்று பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். அப்போது பத்திரிகையாளர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.கார்த்திகேயன் கூறியதாவது; திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், மேலும் மாவட்டத்தில் கஞ்சா, கள்ளச்சாராயம், மற்றும் ரவுடிசம், திருட்டு வழிப்பறி மற்றும் இதர குற்றச்செயல்களை குறைக்கவும், பின்னர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து பேசுகையில் பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
முன்னதாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனைத்தொடர்ந்து தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் இடத்தை பெற்று பல பரிசுகளை வென்றவர் என்பது குறிப்பிட்ட தக்கது. திருவண்ணாமலை நகர்பகுதிகள் சுற்றிலும் சிலநாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடைப்பெற்று வருகிறது. இந்த சம்பவங்கள் நடைபெறாமலும்,மேலும் இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாக கண்டு பிடித்து அவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பரா என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Jobs : மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு; மிஸ் பண்ணாதீங்க..! இதை செக் பண்ணுங்க..