திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு தினந்தோறும் 12-எண் கொண்ட அரசு பேருந்து தினந்தோறும் சென்று வருகிறது. இந்த பேருந்தில் இலவச பெண்கள் பயணம் செய்து கொள்ளலாம், அந்த பேருந்தில் மகளிர் இலவச பேருந்து என ஒட்டப்பட்டு உள்ளது. தினந்தோறும் செல்லும் இந்த அரசு பேருந்தில் அதிக அளவில் கல்லூரி மாணவர்கள் பயணிக்கின்றனர். அவர்களும் பேருந்தில் இலவசமாக பயணிக்கின்றனர். இந்த அரசு பேருந்து பல இடங்களில் பெண்கள் மட்டும் இருந்தால் பேருந்தை நிறுத்துவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பல இடங்களிலும் பேருந்துகளை நிறுத்தி செல்வதில்லை இந்த பேருந்தில் அடிக்கடி ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களிடம் பேருந்து பயணிகள் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு வருவது வாடிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு பேருந்து ஞாயிறுகிழமை செங்கத்தில் இருந்து 12 ஆம் எண் அரசு பேருந்து வந்துக்கொண்டு இருந்தது. அப்போது மண்மலை பகுதியில் பேருந்துக்காக பெண்கள் காத்திருந்தனர்.


 






 


அப்போது மகளிருக்கான இலவச அரசு பேருந்தானது பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மண்மலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் நிறுத்தாமல் சென்ற பேருந்தை ஓடிச்சென்று பேருந்தை வழிமறித்து நிறுத்தி அதில் ஏறினார். அப்போது அந்த பெண்ணிற்கும் நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் பேசுகையில்; அரசு பேருந்து ஞாயிறுகிழமை மண்மலை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தவில்லை பேருந்து நிறுத்தத்தில் நீட் தேர்வுக்கு செல்ல கூடிய மாணவி ஒருவர் இருந்தார். அவர் தேர்வுக்கு சீக்கிரம் செல்லவேண்டும் ‌இவ்வழியாக செல்லகூடிய பேருந்துகள் அனைத்து விரைவு பேருந்துகள் இங்கு நிற்காது,


 




இது போன்ற டவுன் பேருந்துகள் மட்டும் நிற்கும், இதில் பெண்களுக்கு இலவசம் என்பதால் பேருந்துக்கு போதிய வருமானம் இல்லை இதனால் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் அதிகமாக பெண்கள் உள்ள இடத்தில் பேருந்தை நிறுத்துவதில்லை, அன்றும் நாங்கள் பெண்கள் அதிகமாக இருந்ததால் பேருந்தை நிறுத்தவில்லை் அதனால் தான் அந்த பெண் ஓட்டுநரிடம் வாக்கு வாதத்தில் திமுக அரசை பெண்களுக்கு இலவசமாக பேருந்து கேட்டோமா என வாக்கு வாதத்தில் ஈடுபட்டார் என்று தெரிவித்தனர். குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் abp nadu சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இதுகுறித்து துறை ரீதியாக நடத்துநர் மற்றும் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.