திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த அட்டவாடி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் வயது (35), இவருக்கு சொந்தமாக அரட்டவாடி வனத்துறை பகுதியில் வயல் நிலம் உள்ளது. தற்போது கிருஷ்ணன் தனியார் பால் டேங்கர் லாரி ஓட்டி வருகிறார். இவரது மனைவி சுகன்யா வயது (35), இவர் இவர்களுடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.
மேலும் சுகன்யா இவரது வயல்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தும் வருகிறார். இந்நிலையில் அரியாங்குஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கணவரை இழந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்களுடைய குழந்தைகளான பத்து வயது, 8 வயது சிறுமிகள்,7 வயது சிறுவன், ஆகிய மூன்று சிறுவர்களையும் அவர்களுடைய தாய் சுகன்யாவிடம் ஆடு மேய்ப்பதற்காக ரூபாய் 10 ஆயிரத்தை பெற்றுக்கொண்டு கொத்தடிமைகளாக விட்டுச் சென்றுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு குழந்தைகள் ஹெல்ப் லைன் தொலைபேசி எண்ணுக்கு தகவல் அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலின் பெயரில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் வசந்த் பிரபு, திட்ட அலுவலர் இம்மானுவேல், குழந்தை தொழிலாளர் நல அலுவலர் பரமசிவம், குழந்தை பாதுகாப்பு அதிகாரி அசோக் ஆகிய கொண்ட குழுவினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அறியா குஞ்சூர் வனப்பகுதியை ஒட்டி மூன்று குழந்தைகளும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். உடனே அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
இதை அறிந்ததும் சுகன்யா அவரது கணவர் ஆகியோர் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் கொத்திய அடிமைகளாக உள்ள மூன்று குழந்தைகளையும் மீட்டு அருகாமையில் உள்ள குழந்தைகள் காப்பகத்துக்கு அழைத்து வந்து உணவு மற்றும் உடைகள் அளித்தனர். அரட்டவாடி கிராம நிர்வாக அலுவலர் புகார் பெற்று சிறுவர் சிறுமிகளை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் காண்பித்து திருவண்ணாமலையில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இவர்களைப் போல் ஐயா குஞ்சு கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகள் பல்வேறு இடங்களில் கொத்தடிமைகளாக இருக்கிற தகவல் வெளியாகி உள்ளது. எனவே பழங்குடியின குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு உரிய உணவு கல்வி வழங்க வேண்டும் என அப்பகுதியில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பெற்ற குழந்தைகளை தாயே பத்தாயிரம் ரூபாய்க்கு கொத்த அடிமைகளாக விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் உள்ள தாய்மார்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், பிச்சையெடுக்க நிர்ப்பந்திக்கப்படும் குழந்தைகள், உளவியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகள், திருமணம் செய்ய நிர்ப்பந்திக்கும் குழந்தைகள் என பாதிக்கப்படும் குழந்தைகள் பற்றி 24 மணி நேரமும் 1098 என்ற எண்ணை அழைத்து உதவி கோரலாம். பாதிக்கப்படும் குழந்தைகளே கூட நேரடியாக இந்த எண்ணை அழைத்துப் பேசுசலாம்.