திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு ஆட்டோக்களில் செல்ல மாவட்ட நிர்வாகத்தினால் தனி நபர் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார்.


இது குறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இந்த ஆண்டிற்கான சித்ரா பௌர்ணமி விழா வருகிற 4 மற்றும் 5 ஆகிய 2 தேதிகளில் நடைபெற உள்ளது. சித்ரா பௌர்ணமி முன்னிட்டு திருவண்ணாமலை நகருக்கு வருகை தரும் பக்தர்களின் நலன் கருதி ஆட்டோ அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அரசு கலைக்கல்லூரி மைதானம் வரை (பெரும்பாக்கம்), அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோவில் வரை (தண்டராம்பட்டு ரோடு), திருக்கோவிலூர் ரோடு முதல் அத்தியந்தல் வரை (பெரும்பாக்கம்) தனிநபர் கட்டணம் ரூபாய் 50 மட்டும் இந்த வழித்தடத்தில் செல்ல நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




 


அதேபோல் வேட்டவலம் தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் வரை, திருக்கோவிலூர் தற்காலிக பேருந்து நிலையம் முதல் அங்காளம்மன் கோவில் வரை (தண்டராம்பட்டு ரோடு), மணலூர்பேட்டை சாலை முதல் அங்காளம்மன் கோவில் வரை (தண்டராம்பட்டு ரோடு), அரசு கலைக்கல்லூரி முதல் அங்காளம்மன் கோவில் வரை (தண்டராம்பட்டு ரோடு), திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் திருவள்ளுவர் சிலை வரை (திருக்கோவிலூர் ரோடு), திண்டிவனம் ரோடு தற்காலிக பேருந்து நிலையம் முதல் காந்திநகர் பைபாஸ் ரோடு 6-வது குறுக்குத் தெரு வரை (அமோகா ஓட்டல்), நல்லவன் பாளையம் முதல் அங்காள பரமேஸ்வரி கோவில் வரை (தண்டராம்பட்டு ரோடு), பச்சையம்மன் கோவில் முதல் கிருஷ்ணா லாட்ஜ் வரை (சங்கு ஊதுமிடம்), தீபம் நகர் பைபாஸ் ரோடு முதல் அண்ணா நுழைவு வாயில் வரை, எஸ்.ஆர்.ஜி.டி.எஸ் பள்ளி முதல் அவலூர்பேட்டை ரெயில்வே கேட் வரை தனிநபர் ஒன்றுக்கு கட்டணம் ரூபாய் 30 மட்டும் இந்த வழித்தடத்தில் செல்ல நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


 




சித்ரா பவுர்ணமி:


திருவண்ணாமலை நகரைச் சேர்ந்த 950 உள்ளுர் ஆட்டோக்களுக்கு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எந்தெந்த வழித்தடத்திற்கு எவ்வளவு தனிநபர் கட்டணம் என்ற ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டப்படும். மேலும் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்யும் ஆட்டோக்களை தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோக்கள் கட்டணம் பற்றி விவரங்கள் டிஜிட்டல் பேனர்கள் மூலம் தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் எளிதாக பொதுமக்கள் பார்வையில் தென்படும் வகையில் அமைக்கப்படும். மேலும் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரிய வந்தால் திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175- 232266 என்ற எண்ணிற்கு பொதுமக்கள் தெரிவிக்கலாம்.


சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வரும் பக்தர்களின் நலன் கருதி கட்டணமில்லா பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து கிரிவலப் பாதைக்கு வருவதற்கு முக்கியமான இடங்களில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 20 கட்டணமில்லா பேருந்துகள் மற்றும் திருவண்ணாமலை நகர தனியார் பள்ளி நிர்வாகம் மூலம் கட்டணமில்லா பள்ளி வாகனங்கள் இயக்கப்பட உள்ளது. பக்தர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். அஆட்சிய வெளிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.