பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆகும். கோவிலின் பின்புறம் சிவனே மலையாக காட்சி தருகிறார். இந்த 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மகா தீபம் ஏற்றப்படும். இந்நிலையில் மலையின் மீது மர்ம நபர்கள் ஏரி மலையில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுத்துகின்றனர். இதனால் மலையில் உள்ள அரிய வகை மூலிகை மரங்கள் எரிந்து சாம்பலாவதையும், மலையில் உள்ள மான்கள் வனவிலங்குகள் வெளியேறி நகர்பகுதிகளில் வந்துவிடுகிறது. இதனால் நாய்கள் கடித்து உயிரிழந்து விடுகிறது. சிலர் மலையின் மீது ஏரிவிட்டு கீழே இறங்க முடியாமலும், மூச்சி தினறல் ஏற்பட்டு உயிரிழந்து விடுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் அண்ணாமலையார் மலையின் மீது பக்தர்கள் ஏறி செல்ல வனத்துறையின் மூலம் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், மகா தீபத்தின் போது குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே மலை மீது சென்றுவர மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. 


 





 


இந்த நிலையில் மலை உச்சியில் உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு சிலர் முறையாக அனுமதி பெறாமல் மலையின் மீது ஏறி சென்று சிறப்பு பூஜைகள் செய்து உள்ளனர். இந்த சிறப்பு பூஜையை வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. இதில் மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்திற்கு மலர்கள், மலர் மாலை, பழங்கள் மற்றும் நாணயங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்தது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளது. இது குறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை வனச்சரக அலுவலர்கள் மலையின் மீது அனுமதியின்றி சென்றது யார்? என்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மலை மீது ஏறியது திருவண்ணாமலை பே கோபுரம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் வயது (30) என்பதும், மேலும் அவர் திருவண்ணாமலையில் சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இவர் மட்டும் மலை மீது ஏறி சென்றாரா? அல்லது வேறு யாரையாவது அழைத்து சென்றாரா? என்றுள்ளாரா என்று வனத்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் மலைக்கு அனுமதியின்றி சென்ற முருகனுக்கு வனத்துறையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.








திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், மயில்கள், காட்டு பன்றிகள், குரங்குகள் போன்றவை உள்ளன. இந்த நிலையில் காலை கிரிவலப்பாதை செங்கம் சாலை அருகில் உள்ள நுகர்பொருள் வணிக கிடங்கு எதிரில் உள்ள வனப்பகுதியில் இருந்து மான் ஒன்று வெளியே வந்து உள்ளது. இந்த மானை அங்கு சுற்றித்திரிந்த நாய்கள் கடித்து குதறி உள்ளது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், நாய்களை விரட்டி விட்டு மானை மீட்டனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த மானை மீட்டு கால் நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது.