வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த  40 வயதுடைய கட்டிட தொழிலாளி ,   சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்தது பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். தலைமறைவாக இருந்த இந்த பாலியல் குற்றவாளியை , நேற்று மாலை  வேலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர் .


வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சைதாப்பேட்டை , பி டி சி தெருவை சேர்ந்தவர் காலித் அஹமத் என்கிற பாபுல் (வயது 40 ) கட்டிட தொழிலாளியான இவர் , திருமணம் ஆகி , மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்  .பாபுல் , இதே பகுதியை சேர்ந்த 15  வயது சிறுமிக்கு  , அவரது பெற்றோர்கள் இல்லாத நேரத்தில்  பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது . சிறுமியின் பெற்றோர்கள் இருவரும் , வீட்டில் இல்லாத சமயம் பார்த்து , தொடர் பாலியல் வன்கொடுமை செய்வதை வழக்கப்படுத்தியுள்ளார். 




இந்நிலையில் திங்கட்கிழமை இரவு 9 மணி அளவில்  , வேலையை முடித்துவிட்டு மதுபோதையில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்த குற்றவாளி பாபுல் , அந்த சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்துகொண்டார் . 


பின்பு அவரது வீட்டு வாசலில் நின்று கொண்டு , குடிக்க தண்ணீர் கொண்டு வருமாறு , கேட்டுள்ளார் . சிறுமி சமயலறையில் இருக்கும் தண்ணீரை கொண்டுவர உள்ளே சென்ற போது , மதுபோதையில் , பாபுல் சிறுமியை பின்தொடர்ந்து உள்ளே சென்றுள்ளார் . பின்பு வலுக்கட்டாயமாக , சிறுமியை ஒரு அறைக்குள் தள்ளி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .


இதை வெளியில் கூறினால் , 'கொலை செய்துவிடுவேன்' என்ற கொலை மிரட்டலும் விடுத்துள்ளார் . அக்கம் பக்கத்தினர் யாரிடமும் சொல்லாமல் வீட்டினுள்ளே இருந்த அந்த சிறுமி , தனது பெற்றோர் , வேலையில் இருந்து திரும்பியதும்  , நடந்த சம்பவத்தை , கூறி கதறி அழுதுள்ளார் . இதனிடையே , குற்றவாளி பாபுல்-யை தேடி அவரது வீட்டிற்கு சென்றபொழுது . அவர் தலைமறைவு ஆனது , சிறுமியின் பெற்றோர்க்கு தெரியவந்தது .




உடனடியாக , அன்றைய (திங்கட்கிழமை) இரவே , சிறுமியின் பெற்றோர் , வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .


புகாரைப் பெற்று , குற்றவாளியை தேடிவந்த போலீசார் ,  வேலூர் , பழைய காட்பாடி மலை பகுதி அருகே பதுங்கி இருந்த குற்றவாளி பாபுல்-யை , நேற்று மாலை , கைதுசெய்தனர் .


பாபுல் கொடுத்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவன் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளியிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் , வேலூர் அனைத்து மகளிர் காவல் துறை அதிகாரிகள் .




வீட்டில் தனியே இருந்த சிறுமியை , அதே பகுதியை சேர்ந்த ஒருவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .