வேலூர் , திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும்  500 கும் கீழ் குறைந்துள்ளது   .


வேலூர்  மாவட்டத்தில், இன்று மட்டும் 38  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 47,754 ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 46 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46,236 ஆக அதிகரித்துள்ளது. இன்று இரண்டு நபர்கள் கொரோனா நோய் தொற்றுக்கு பலி ஆனதை  தொடர்ந்து  கொரோனா நோய்த்தொற்றால் வேலூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1090 ஆகியுள்ளது .


இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில்  428  நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக வேலூர் மாவட்டத்திலுள்ள 9க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .




இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் , இன்று மட்டும் 27  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41732  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 33 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40638 ஆக அதிகரித்துள்ளது. இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதியதாக உயிரிழப்புகள் ஏதும் பதிவாகாததால் கொரோனா நோய் தொற்றுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 738 ஆகியுள்ளது .


இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  356   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 10 கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .





ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மற்றொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தில்  , இன்று மட்டும் 18  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28009  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 19 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 27115 ஆக அதிகரித்துள்ளது. இன்று திருப்பத்தூர்  மாவட்டத்தில் வேலூர் மாவட்டத்தை போலவே இரண்டு கொரோனா  உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் கொரோனா நோய் தொற்றுக்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 597 ஆகியுள்ளது. இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில்  297   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள 11 கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .




கொரோனா பரிசோதனைகள் பொறுத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 2893 நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 2006 நபர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1776  நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , இதில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோர்களில் 1 .2  சதவிகிதம் நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில்  1  சதவிகிதம் நபர்களுக்கும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1 .4  சதவிகிதம் நபர்களுக்கும் கொரோனா பொசிட்டிவ் என்ற முடிவுகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .