திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தாலுகா காவல் நிலையத்தில் இன்று மாலை 2 காதல் ஜோடிகள் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு காதல் ஜோடி வேங்கிக்கால் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கார்த்திகா என்பவர் தனது உறவினரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.திருமணமான இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தண்ணீர் வாகனம் ஓட்டும் ஒரு வாலிபருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கிடையே காதல் ஏற்பட்ட
15 நாட்களில் தண்ணீர் வாகனம் ஓட்டும் வாலிபரை திருமணம் செய்துகொண்டார். அவரும் தனது 2-வது கணவருடன் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள தாலுகா காவல்நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்தார். அப்போது முதல் கணவர் வீட்டார் மற்றும் பெண்ணீன் வீட்டாரும் காவல்நிலையத்தில் சென்று பெண்ணை எங்களுடன் அனுப்பி வையுங்கள் என காவலர்களிடம் கூறியுள்ளனர். அதேபோன்று திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் ஒரே பகுதியை சேர்ந்த இளம் வயது பெண் மற்றும் இளைஞர் ஜவுளிகடைக்கு ஒரே பேருந்தில் வேலைக்க பயணம் செய்துள்ளனர்.
அப்போது இருவர்களுக்கு இடையே நண்பர்களாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் 10 நாட்களிலேயே காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 நாட்கள் மட்டுமே பணிபுரிந்த இளம் வயது ஆண், பெண் ஊழியர்கள் காதல் வசப்பட்டு இரு வீட்டிற்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து அவர்களும் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இரண்டு காதல் ஜோடியும் கலப்புத் திருமணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்களின் உறவினர்கள் தாலுக்கா காவல் நிலையத்தில் குவிந்ததால் தாலுகா காவல் நிலையத்தில் காதல் ஜோடியின் உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.
தற்போது தாழ்த்தப்பட்ட மக்கள் திட்டமிட்டு வேறு ஜாதி பெண்களை திருமணம் செய்து கொள்வதாகக் கூறப்படுகிறது .அதன் அடிப்படையில் பல காதல் திருமணங்கள் கலப்பு திருமணமாக நடைபெற்று வருகிறது. இதனை காதல் என்று கூற முடியாது இது ஒரு திட்டமிட்ட சதி என்று பெண்ணின் உறவினர்கள் காவல்துறையினரிஞம் கூறுகின்றனர். இதையடுத்து காவல்துறையினர் இருதரப்பினரையும் அழைத்து பேசினர். இதன் முடிவில் இருதரப்பினரும் நீதிமன்றத்திற்கு செல்லுமாறு காவல்துறையினர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.அடுத்தடுத்து இரண்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் கேட்டு வந்ததால் திருவண்ணாமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.