திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கிருந்த ஒரு சிலர், தாக்கியவர்களையும் தாக்கப்பட்ட சிறுவர்களையும் பிடித்து விசாரித்ததில் சிறுவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டினத்தைச் சேர்ந்த முருகேஷ் (51), சிவா (29) என்பதும், இவர்கள் பல்வேறு மாவட்டங்களில் வாத்து விற்பனை வியாபாரத்தில் ஈடுபட்டு வருதாகவும், இதற்காக 10 முதல் 15 வயது உடைய இரண்டு சிறுவர்களை வேலைக்காக பயன்படுத்தி வருவதும் தெரிந்தது.

  


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சேலம் பனைமரத்துப்பட்டி ஒன்றியத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் - கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் கவுன்சிலர்கள் திமுகவுக்கு ஆதரவு



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- 3 லட்சத்தை கடனாக வாங்கி கொண்டு ஏமாற்றிய சத்தியசீலன் - நண்பன் ஏமாற்றிய துக்கத்தில் நீலகண்டன் தற்கொலை


இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கம் அருகே வாத்துக்களை மேய்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன் கொத்தடிமைகளாக சிறுவர்களை அழைத்து வந்து வேலை வாங்கிய நிலையில் இரு சிறுவர்களும், உரிமையாளர்களுக்கு தெரியாமல் கலசபாக்கத்தில் இருந்து நடந்தே திருவண்ணாமலைக்கு தப்பித்து வந்துந்த நிலையில் முருகேஷ் மற்றும் சிவா இருவரும் சேர்ந்து சிறுவர்களை மிரட்டி தாக்குதல் நடத்தியது தெரியவந்த நிலையில் இந்த விவகாரம் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இலங்கையில் அதிகரிக்கும் சீன ஆதிக்கம் - ஈசிஆரில் ரோடு போட்டு செக் வைக்கும் இந்தியா



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- அவனியாபுரத்தில் ஆறுதல் பரிசை வாங்க மறுத்த யோகதர்ஷினிக்கு கோவையில் பரிசாக கிடைத்த தங்க காசு


பாதிக்கப்பட்ட சிறுவர்களிடம் மாவட்ட குழந்தைகள் நல அலுவலா் (பொறுப்பு) சித்ர பிரியா விசாரித்தாா். இந்த விசாரணையில், முருகேஷ், சிவா ஆகியோா் சிறுவா்களின் பெற்றோரிடம் பணம் கொடுத்துவிட்டு. அவா்களை கொத்தடிமைகளாக அழைத்து வந்து வாத்து மேய்க்க வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் சித்ர பிரியா இன்று புகாா் கொடுத்தாா். வாத்து உரிமையாளா்கள் முருகேஷ், சிவா ஆகியோா் மீது வழக்குப் பதிந்து தப்பிச் சென்ற அவா்களைத் தேடி வருகின்றனா். சிறுவா்கள் இருவரும் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனா். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நெல்லையில் பறவைகள் கணக்கெடுக்கும் பணிகள் தொடக்கம் - தாமிரபரணி படுகையில் 2 நாட்கள் நடைபெறுகிறது