ராணிப்பேட்டை மாவட்டத்தில்  சிறுமி ஒருவருக்கு சிகிச்சைக்குப் பிறகும் கண்ணில் இருந்து எறும்புகள் வெளியானதால் மாவட்ட ஆட்சியரிடம் சிகிச்சைக்காக உதவி கோரி மனு அளித்திருக்கிறார். 


ராணிப்பேட்டை சாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி. நேற்று ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற குறைத்தீர்க்கும் கூட்டத்தில் பூங்கொடி தனது மகளுடன் கலந்து கொண்டார். அப்போது ஆட்சியரிடம் மனு கொடுத்த அவர், தனது கணவன் கூலி செய்து வருவதாகவும், அவர்களுக்கு 14 வயதில் ஷாலின் என்ற மகள் உள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார்.


இந்நிலையில், அவர் அளித்திருக்கும் மனுவில் “9-ம் வகுப்பு படித்து வரும் என் மகளுக்கு கடந்த ஓராண்டாக வலது கண்ணில் இருந்து தினமும் 15-க்கும் மேற்பட்ட எறும்புகள் வெளியேறி வருகிறது. இது தொடர்பாக கண் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகளில், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டோம். ஆனால், எந்தவித பயனும் இல்லை. பள்ளிக்கூடம் சென்று வரும் எனது மகள் இதனால் மிகுந்த அவதிப்படுகிறாள். இந்த பிரச்னைக்கு உயர் சிகிச்சை அளிக்க, மாவட்ட ஆட்சியர் உதவி செய்திட வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.



மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சிறுமிக்கு தேவையான சிகிச்சைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். அதனை அடுத்து, மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிமாறன் தலைமையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வாலாஜா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அச்சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு மருத்து பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் கண்ணில் இருந்து எறும்புகள் வெளியேறுவதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். உரிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சிறுமி விரைவில் குணமடைய வேண்டுமென அவரது தாயார் கேட்டுக்கொண்டுள்ளார்.


ஏற்கனவே, இதை போல கர்நாடக மாநிலம் தக்‌ஷின கன்னடாவை மாவட்டத்தில் ஒரு சிறுமியின் கண்ணில் இருந்து எறும்புகள் வெளியேறியது அதிர்ச்சியை உண்டாக்கியது. சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி உறங்கிக்கொண்டிருந்தபோது காது வழியாக எறும்புகள் உடலுக்குள் சென்றிருக்கும். அதனால், அவை இப்போது கண் இமை வழியே வெளியேறுகின்றன என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.




மேலும் படிக்க: Kerala: கரைபுரண்டோடும் ஆற்றில் கல்யாண போட்டோஷூட்... நீரில் மூழ்கி கணவன் உயிரிழந்த சோகம்..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண