உத்தரகாண்ட் முதல்வராக சமீபத்தில் பொறுப்பேற்ற திரத் சிங் ராவத் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவிரை ராஜினாமா செய்ததால் திரத் சிங் முதல்வரானார். பெண்கள் அணியும் கிழிந்த ஜீன்ஸ் குறித்த ராவத்தின் பேச்சு சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்றும் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராவத் “இந்தியாவையும் உலகையும் 200 ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த அமெரிக்காவை விட கொரோனாவை இந்தியா சிறப்பாக கையாண்டது என பேசியிருந்தார்.




அதோடு அதிக ரேஷன் அரிசி வேண்டுமென்றால் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் கொரோனா அறிகுறிகள் இருந்ததால் திரத் சிங்கிற்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.