தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார். கரூர் மாநகராட்சியில் துவங்கிய அவரது தேர்தல் பிரச்சார பயணம் திருச்சி, தஞ்சாவூர், கடலூர், சென்னை, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கோவை மாநகராட்சி என தொடர்ந்தது. ஆனால், தூத்துக்குடி மாநகராட்சி இந்த தேர்தல் பிரச்சார பயணத்தில் இடம் பெறாதது திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நெல்லை மாநகராட்சி வரை வந்துள்ள இளைஞரணி செயலாளர் உதயநி திஸ்டாலின் மிக அருகில் இருக்கும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு வராமல் தவிர்த்து சென்றுள்ளது உடன்பிறப்புகள் மத்தியில் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது. உதயநிதியின் வருகை இல்லாததால் உடன்பிறப்புகள் உற்சாகம் இல்லாமல் சோர்ந்து இருப்பது வெளிப்படையாக தெரிகிறது. இதற்கிடையே தூத்துக்குடி மாநகராட்சியில் திமுக மற்றும் திமுக கூட்டணிக்கு கடும் போட்டியாக அதிமுக களத்தில் இருக்கிறது. மேயர் வேட்பாளராக   அமைச்சர் ஜீதா ஜீவனின் சகோதரர் ஜெகன் முன்னிறுத்தப்படுவதை உதயநிதி விரும்பவில்லை என கூறப்படுகிறது.


இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலினின் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரம் முரசொலியில் வெளியிடப்பட்ட போதே அதில் தூத்துக்குடி மாநகராட்சி இடம் பெறவில்லை.இதைப்பார்த்த எங்க மாவட்ட பொறுப்பாளரான அமைச்சர் கீதாஜீவன் தலைமை கழகத்தில் பேருக்கு உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்திட வருகை தரவேண்டும் என்று கேட்டதாகவும், இதன் உண்மையை தெரிந்த உதயநிதி கடைசிவரை கிரீன் சிக்னலையும் கொடுக்கவில்லை.


அதற்கு காரணம் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் வேட்பாளராக தனது ஆதரவாளரை தேர்வு செய்ய முயன்ற உதயநிதிக்கு செக் வைத்து, தான் சொல்பவரே மேயர் வேட்பாளாரக்க வேண்டும் என்று கீதா ஜீவன் நடந்துகொண்டதுதான் காரணம் என்கிறார்கள் விவர அறிந்தவர்கள். இதனால் கோபமடைந்த உதயநிதி தூத்துக்குடிக்கு செல்லாமல் தனது தேர்தல் பிரச்சாரத்தை புறக்கணித்துள்ளார்.


காலை 10மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி,  பின்னர் வள்ளியூர் வரை பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்மாலை 6மணிக்கு நெல்லை மாநகராட்சியிலே தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார். அதற்கு பிறகு அங்கிருந்து  மதுரை போய் இரவில் தங்கி அதற்கு அடுத்த நாளும் மதுரையிலே தேர்தல் பிரச்சாரம் செய்டிருக்கிறார். அவர் நினைத்திருந்தால், திருநெல்வேலி மாநகராட்சியிலே 6மணிக்கு முடித்துவிட்டு நெல்லைக்கு மிகமிக அருகில் இருக்கும் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 7மணிக்கு முன்னரே வந்து தேர்தல் பிரச்சாரம் செய்துவிட்டு இங்கிருந்து மதுரை சென்றிருக்க முடியும். ஆனால், அதனை செய்யவில்லை உதயநிதி ஸ்டாலின். காரணம் கீதா ஜீவன் மீது இருக்கும் கோபம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.


தென்மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு திமுகவின் இரண்டாம்கட்ட தலைவர்கள் எப்போது வந்தாலும் தூத்துக்குடி மாவட்ட எல்லையில் வரவேற்பு கொடுப்பது வழக்கம். ஆனால் நெல்லையிலே இருந்து மதுரை சென்ற இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு மாவட்ட எல்லையான கயத்தாரிலோ, கோவில்பட்டியிலோ மாவட்ட பொறுப்பாளர் கீதா ஜீவன் வரவேற்பு கொடுக்காமல் போனது உதயநிதியை உரசிபார்ப்பதுபோல் இருக்கிறது என கொதிக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.




தூத்துக்குடி மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்து பிரச்சாரம் மேற்கொண்டு தகுந்த ஆலோசனை வழங்கி சென்றுள்ளதாகவும். இதனால் அதிமுகவினர் உற்சாகத்தில் இருப்பதாகவும் புலம்பும் தூத்துக்குடி திமுகவினர், சட்டமன்ற தேர்தலில் ஒரு செங்கல்லை வைத்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து வாக்கு வேட்டை நடத்திய உதயநிதி ஸ்டாலின் கீதா ஜீவன் மேலுள்ள கோபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தையே புறக்கணித்து சென்றிருக்கிறார் என ஆதங்க பொங்க பேசி வருகின்றனர்.