தூத்துக்குடி அண்ணாநகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் முத்துராமன். அவரது மனைவி காளியம்மாள், இவர்களது மகள் காத்தம்மாள் என்ற கார்த்திகா. இவருக்கும் மார்த்தாண்டம்பட்டி சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும்  பத்து மாதத்திற்கு முன் திருமணம் முடிந்து உள்ளது.




இந்நிலையில் கர்ப்பிணியான கார்த்திகாவிறகு கடந்த வாரம் மார்த்தாண்டம்பட்டியில் வளைகாப்பு நடத்தி தூத்துக்குடி அண்ணாநகர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். இவர்கள் வசிக்கும் வீடு சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. வீட்டின் மேற்கூரை மிகவும் பழுதடைந்ததால் தெர்மோகோல் சீலிங் அமைத்துள்ளனர். இதனால் கூரை மேலும் மோசமானது வீட்டில் உள்ளவர்கள் கவனிக்கவில்லை. சீலிங்கில் மேற்கூரை காங்கிரட் உதிர்ந்து விழுந்ததை எலி ஒடுவதாக நினைத்துள்ளனர்.




இந்நிலையில், இன்று அதிகாலை இவர்கள் வழக்கம் போல் கணவன் மனைவி மற்றும் மகள் ஆகிய 3 பேரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகளில் சிக்கிய தாய் மற்றும் கர்ப்பிணி மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுக்கி உயிரிழந்தனர். வீட்டின் ஒரு ஓரத்தில் படுத்திருந்த முத்துராமன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.




முத்துராமன் காய்கறி மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் கழிப்பறைக்கு கட்டணம் வசூல் செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த வேலைக்காக தினமும் வழக்கமாக 3 மணிக்கு அவர் செல்வது வழக்கம். அதிகாலையில் வேலைக்கு செல்ல எழுந்து வரும் முத்துராமன் வராதாதல் உள்ளே சென்று பார்த்த அவரது தாயார் வீடு இடிந்து கிடப்பதை கண்டு அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.




இதனை தொடர்ந்து தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து தீயணைப்புத்துறைக்கு கொடுத்த தகவலை தொடர்ந்து  இடிபாடுகளில் சிக்கிய இரு உடல்களையும் மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 




மேலும் காயமடைந்த முத்துராமனை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். .மேலும் விபத்து குறித்து தூத்துக்குடி தென்பாகம் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.