நாள்: 03.05.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை
மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
இராகு :
மாலை 3.00 மணி முதல் 4.30 மணி வரை
குளிகை :
மாலை 12.00 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் –வடக்கு
ராசி பலன்கள்
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். எனவே திட்டமிட்ட அணுகுமுறை தேவை. விஷயங்களை எளிதாக எடுத்துக்கொண்டால் மகிழ்ச்சியுடன் இருக்கலாம். பணிநிமித்தமாக சிறிய பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரும். நீங்கள் பணிகளை ஒழுங்கான முறையில் திட்டமிடுவது உதவிகரமாக இருக்கும். குறைந்த அளவு பணம் காணப்படும். பணம் சேமிப்பது கடினமாக காணப்படும்.
ரிஷப ராசி நேயர்களே, உங்களின் நெகிழ்வான அணுகுமுறை காரணமாக நீங்கள் சாதகமான பலன்களைப் பெறலாம். சரியான தொடர்பாடல் பயனுள்ளதாகவும் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கும். தவறுகள் ஏற்படாமல் தடுப்பதற்கு உங்கள் பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இன்று அஜாக்கிரதை காரணமாக பண இழப்பு காணப்படுகின்றது. அவ்வாறு பண இழப்பு நேரிட்டால் அதனை சமாளிப்பது கடினமாக இருக்கும்.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, தொழில் சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. முக்கியமான முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும். தன்னம்பிக்கையுடன் பணியாற்றுவீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அலட்சியம் காரணமாக இன்று பணத்தை இழக்க நேரலாம். எனவே பணத்தை கையாளும் போது அதிக கவனம் தேவை.
கடகம் :
கடக ராசி நேயர்களே, இன்று அமைதியான சௌகரியமான நாள். திருப்தியான எண்ணங்களும் எதையோ பெரிதாக சாதித்தது போன்ற உணர்வும் உங்களிடம் காணப்படும்.சகபணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்கள் உங்களுக்கு நன்கு உதவுவார்கள். புதிய வேலைகிடைப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இன்று பயணம் மேற்கொள்ள நேரலாம். இன்று பயனுள்ள சேமிப்பிற்கான நாட்டத்தை கொண்டிருப்பீர்கள். இது உங்களுக்கு திருப்தியை அளிக்கும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, இன்று சாதகமான நாள். புதிய தொடர்புகள் இன்று உங்களுக்கு மிகவும் பயன் தருவதாக அமையும். எண்ணங்கள் பூர்த்தியடைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பணியிடச் சூழ்நிலை உகந்ததாக இருக்காது. பணிச்சுமை அதிகமாக இருக்கும். அசௌகரியங்கள் காணப்படும். அது உங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தும். ஊக்கத்தொகை மற்றும் சலுகைகள் போன்ற வகையில் உங்கள் கடின உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரி உங்களை பாராட்ட வாய்ப்புள்ளது.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, இன்று மகிழ்ச்சியாகவும் ஆற்றலுடனும் இருப்பது உங்களுக்கு நல்லது. எதையும் எதிர்பாராமல் செயலாற்றுங்கள். கடைசியில் வெற்றி உங்களுடையதே. நீங்கள் பணிச்சுமைக்கு ஆளாவீர்கள் அது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும். பணிகளை திட்டமிட்டு அதன்படி செயல்படுத்துங்கள். உங்கள் வீட்டை மேம்படுத்துவதற்காக செலவு செய்வீர்கள். அதனால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் நெருங்கிய உறவினர்களுக்காகவும் பணத்தை செலவு செய்வீர்கள்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, பணிகளில் பொறுப்புகளை ஏற்க நேரிடும். பணியில் கவனம் தேவை. இது உங்கள் நலனை மேம்படுத்த வழிகாட்டும். உங்கள் மனதில் உள்ள குழப்பம் காரணமாக உங்கள் துணையுடன் சூடான வாக்குவாதத்தில் நீங்கள் ஈடுபடலாம். இது உறவின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும். இன்று நிதிநிலைமை ஆரோக்கியமாக காணப்படாது. செலவுகள் காரணமாக பணப்பற்றாக்குறை காணப்படும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இன்று மிகவும் துடிப்பான நாள். இன்று வெற்றிக்கு அடிகோலும் நாள். சுய வளர்ச்சிக்கான முயற்சிகளை எடுப்பீர்கள். பணிகளை குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிக்கான பாராட்டைப் பொறுவீர்கள். இன்று நிதிநிலைமை சிறப்பாக காணப்படும். பயனுள்ள வகையில் பணத்தை செலவு செய்வீர்கள்.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும். விஷயங்களை வேறு விதமாக அணுகுவது நல்லது. பயனுள்ள முடிவுகளை நீங்கள்எடுக்கலாம். பணிச் சூழல் சவாலானதாக இருக்கும். பணிகளில் தவறுகள் நேர வாய்ப்பு உள்ளது. இதனை நீங்கள் தவிர்க்க வேண்டும். நிதிவளர்ச்சி இன்று சிறப்பாக காணப்படும். கடின முயற்சி மூலம் தான் நீங்கள் பலனை அதுவும் தாமதமாகத் தான் அடைய முடியம்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, இன்று நல்ல பலன்களைக் காண தொழில்சார்ந்த மற்றும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்த்தல் நலம். பணிச்சுமை அதிகமாக காணப்படும். உங்கள் பணிகளை மேற்கொள்ளும் பொழுது நீங்கள் தடைகளை சந்திக்க நேரலாம். நிதி வளர்ச்சி இன்று அவ்வளவு எளிதாக கைக்கு எட்டிவிடாது. உங்கள் நிதிநிலைமை உங்களுக்கு திருப்தி அளிக்காது.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, இன்று மிதமான பலன்களே கிடைக்கும் நாள். இன்றைய நிகழ்வுகள் உங்களுக்கு சாதகமாக அமைய அமைதியாக இருக்க வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பதற்கான அதிர்ஷ்டம் இன்று காணப்படும். பணிநிமித்தமாக பயணம் மேற்கொள்வீர்கள். இது உங்களுக்குப் பொருந்தும். இன்று பணவரத்துக்கான வாய்ப்பு குறைவு. எனவே இன்று கணிசமான தொகை காண்பது கடினமாக காணப்படும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, உங்களின் இனிமையான தொடர்பாடல் மூலம் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளை இன்று முயல்வீர்கள். பணிச்சூழல் சுமுகமாக காணப்படும். நற்பெயரை எடுப்பீர்கள். நீங்கள் பணியாற்றும் விதமும் உங்கள் தொடர்பாடலும் மகிழ்ச்சி தரும் வகையில் காணப்படும். அது உங்கள் மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும்.இன்று அதிகமான பணம் காணப்படும். விரைவுக் கடன் மூலம் இன்று பணம் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்