Twitter: வன்முறையை தூண்டும் பல கோடி இந்திய கணக்குகள் முடக்கம் - ட்விட்டர் அதிரடி முடிவு
வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான ஒன்று ட்விட்டர் கணக்குகள். உலகளவில் பல கோடி பேர் இதில் கணக்குகள் வைத்துள்ளனர். ஆனால் சமீப காலமாக பல கோடி பயன்பாட்டாளரின் ட்விட்டர் கணக்குகளை முடங்கியுள்ளது ட்விட்டர் நிறுவனம்.
இன்று இது போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைக்காதவர்கள் என யாரையுமே பார்க்க முடியாது. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் இவை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. உலகளவில் இவற்றின் நெட்ஒர்க் இருப்பதால் பல வன்முறை சம்பவங்கள், குழந்தைகள் பாலியல் சுரண்டல் மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் விதமாக பல போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவை காட்டுத்தீ போல வேகமாக பரவி வருகிறது. அவற்றை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்விட்டர் நிறுவனம் சுமார் 40,982 இந்திய கணக்குகளை குழந்தைகளின் பாலியல் சுரண்டலுக்காகவும், 2,158 இந்திய கணக்குகளை பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் கணக்குகள் என அவற்றை தடை செய்து அகற்றியுள்ளது.
மைக்ரோ-பிளாக்கிங் தளமான ட்விட்டர் இந்திய அரசாங்கத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளடக்கத் தடை உத்தரவு சார்பில் 43,140க்கும் மேற்பட்ட இந்திய ட்விட்டர் கணக்குகள் வழிகாட்டுதல்களை மீறிய குற்றத்திற்காக கடந்த ஜூன் மாதம் தடை செய்தது.
மைக்ரோ பிளாக்கிங் தளம் மே 26 முதல் ஜூன் 25 வரை லோக்கல் கிரிவன்ஸ் மெக்கானிசம் மூலமே பெறப்பட்ட 724 புகார்களில் இதுவரையில் 122 புகார்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மே மாதத்தில் மட்டும் 46,000 க்கும் மேற்பட்ட கணக்குகளை தடை செய்துள்ளது.
இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்தின் 4(d) விதிகளின் படி ட்விட்டர் நாட்டில் உள்ள பயனாளர்களின் புகார்கள் மற்றும் அதை கையாள்வது தொடர்பான மாதாந்திர அறிக்கையை அவசியம் வெளியிட வேண்டும்.
அனைவரும் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்தவும், அதே வேளையில் துன்புறுத்தும், அச்சுறுத்தும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை ட்விட்டர் நிறுவனம் என்றுமே அனுமதிக்காது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதிய தகவல் தொழிநுட்ப 2021 விதிகளின் படி, 5 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களை கொண்ட சமூக ஊடகங்கள் தங்களின் மாதாந்திர அறிக்கையை வெளியிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் IT அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தேவையற்ற உள்ளடக்கங்களை அகற்ற ட்விட்டர் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு இணங்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ட்விட்டர் நிறுவனத்தை எச்சரித்துள்ளது IT அமைச்சகம்.