பிரபல தொகுப்பாளினி பாவனா தோனி ஏன் ஸ்பெஷலான மனிதர் என்பது குறித்து பேசியிருக்கிறார். 


தோனி குறித்து அவர் பேசும் போது, “ தோனியை யாருக்குத்தான் பிடிக்காது. ஒவ்வொரு முறையும் நாம் ஏதோ ஒன்றை சாதித்துவிட்டோம் என்று யோசிப்பதற்கு கூட ஸ்பேஸ் இல்லை என்று ஃபீல் பண்ண வைக்க கூடிய மனிதர் தோனி. அவர் எவ்வளவு  சாதித்து இருக்கிறார். ஆனாலும் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறார். 


 






எவ்வளவுதான் நம்ம சாதிச்சாலும் மனித நேயத்தோட, ரொம்ப பணிவா இருக்கணும் அப்படிங்கிறத நான் அவர்கிட்ட இருந்து கத்துக்கிட்டேன். எப்பவும் அவரது முகத்தில் ஒரு ஸ்மைல் இருக்கும். நிறைய பேரிடம் நாம் பேசிருப்போம். நிறைய நிகழ்ச்சிகள் செய்திருப்போம். ஆனாலும் நம்மை தெரியாது போல செல்வார்கள். ஆனால் தோனி அப்படி இல்லை. 4 நாள் தொடர்ந்து அவருக்கு காஃபி கொடுக்கிற ஆளாக இருந்தால் கூட, அவரை பார்த்து நேற்று நாம் பார்த்தோமே என்பார். அதனால்தான் அவர் ஸ்பெஷலான மனிதர்” என்று பேசினார். 


 






சென்னையை சேர்ந்த தொகுப்பாளினி பாவனா ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர், ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிக்கு சேர்ந்தார். அதன் பின்னர் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய்டிவியில் இணைந்த பாவனா  ’சூப்பர் சிங்கர் ஜூனியர்’,   ‘ஏர்டெல் சூப்பர் சிங்கர்’‘ஜோடி நம்பர் 1’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.


அதனைத்தொடர்ந்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ்  தமிழில் இணைந்த அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். பாடகியாகவும் வலம் வரும் பாவனா, மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நீதில் ரமேஷ் திருமணம் செய்து அவர் அங்கு வசித்து வருகிறார்.