தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையமும் உங்களுக்கான தேசிய ஆணையமும் இணைந்து சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிராக இணையத்தில் உலவும் குற்றங்கள் என்ற தலைப்பில் காவேரி மகளிர் கல்லூரியில் நிகழ்ச்சி துவங்கியது.


தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி வரவேற்பு விழா திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா கலந்து கொண்டு   மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார்.


அப்போது அவர் மாணவர்களிட பேசுகையில்.. ”மாணவிகளுடன் கலந்துரையாடல் செய்வது மிகவும் மகிழ்ச்சி. நாங்களும் உங்களை போல இருந்து தான் வந்துள்ளோம். இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்கள் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது. அதே சமயம் நல்ல கருத்துகளை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதில் இருந்து வெளியே வருவது உங்கள் கையில் இருக்கு.  பெண்கள் என்றாலே பல பிரச்சினைகள் வரும்.  Facebook, Instagram உள்ளிட சமூக வலையதலங்களில் பல்வேறு கட்டுபாடுகள் இருக்கு. ஆகையால் உங்கள் தனிப்பட்ட கணக்குகளை அதற்கு ஏற்றவாறு மாற்றிக்கொண்டால், பல பிரச்சினைகளில் இருந்து மீண்டு வரலாம். தமிழ்நாடு அரசு பெண்கள் பாதுகாப்புக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  எந்த பிரச்சினையாக இருந்தாலும் நாம் அதை கண்டுகொள்ளாமல் இருக்க கூடாது. அதை நாம் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் என்றால் அப்போது தான் அதில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியும். ஆகையால் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும். குறிப்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 




மேலும்  பெண்கள் முன்வந்து புகார் தெரிவித்தால் தான் காவல்துறையால் நடவடிக்கைகள் எடுக்கமுடியும்.  ஒரு பிரச்சினை வந்தால் அதை எப்படி தீர்க்க முடியும் என்பதை முன் கூட்டியே யோசித்து தீர்மானிக்க வேண்டும்.  ஆகையால் பெண்கள் அனைவரும் பாதுக்காப்பு, முன்னெச்சரிக்கை, விழிப்புணர்வு ஆகியவற்றை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும்” என்றார். 


அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் பெண்களுக்கான சட்ட உதவி மையத்தில் நிர்மலா ராணி காவேரி மகளிர் கல்லூரியின் முதல்வர் சுஜாதா சிறப்புரையற்றினார். முக்கிய உரையாக தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி சபையின் இயக்குனர் டாக்டர் காளிராஜ் மற்றும் தேசிய இணைய பாதுகாப்பு ஆராய்ச்சி சபையின் உறுப்பினர் ராணி உரையாற்றினார்.


இந்நிகழ்ச்சி மூன்று அமர்வுகளாக நடைபெற்றது. மூன்றாம் ஆண்டு பெண்களுக்கான வளர்ச்சி மற்றும் திட்டமிடல் மையத்தில் இயக்குநர் சீதாலெட்சுமி உரையாற்றினார். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருச்சி மாவட்ட சமூக நல அலுவலர் நித்யா நன்றியுரை ஆற்றினார்.



 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண