கரூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். விதிமுறைகள் மீறி செயல்படும் அத்தகைய நிறுவனங்களுக்கு கரூர் மாவட்ட வணிகர்கள் சங்கம் துணை போகாது என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பின் கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜு பேட்டி.
கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜூ தலைமையில் 150 க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். அப்போது கரூர் மாவட்ட அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். கரூர் மாவட்டத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் அதிகமாக விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஆய்வில் ஈடுபட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு கரூர் மாநகரில் உள்ள கடையில் இருந்த பொருட்களை எல்லாம் பறிமுதல் செய்து கடையை சீல் வைத்து, அபராதம் விதித்திருந்தார்.
இந்த நிலையில் மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பு மற்றும் மாவட்ட வர்த்தக தொழில் கழகம் சார்பில் கரூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். அப்போது கலெக்டர் போதை பொருள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும். அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். அவரின் அறிவுரையை ஏற்று கரூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்ய வேண்டாம் என அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் கேட்டு கொள்வதாகவும், மேலும், சீல் வைக்கப்பட்ட கடைகளை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளர்.
மேலும், அனைத்து கடைகளுக்கும் சங்கத்தின் சார்பில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்க கூடாது என தகவல் கொடுக்கப்படும் எனவும், விதிமுறைகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது எடுக்கப்படும் சட்ட நடடிக்கைகளுக்கு சங்கம் பொறுப்பல்ல எனவும் கூறினார். அதை தொடர்ந்து அங்கிருந்த நிர்வாகிகளுக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள 36 சங்கம் மூலம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி தமிழக அரசுக்கு உட்பட்டு அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே விற்க அனுமதி உண்டு எனவும், அதை மீறி செயல்படும் வணிக நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் சங்கங்களை நாட வேண்டாம் என படிவம் ஒன்றை எழுதி இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வந்திருந்த அனைத்து வணிக நிறுவனங்கள் மூலம் அதன் உரிமையாளர்கள் கையெழுத்திட்டு அதனை மாவட்ட சங்கத்தின் ஒப்படைத்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவரின் எச்சரிக்கையை தொடர்ந்து வருகின்ற 20ஆம் தேதி முதல் கரூர் மாவட்டத்தில் முற்றிலும் போதைப் பொருள் இல்லாத மாவட்டமாக இருக்குமா என்ற சமூக ஆர்வலர் கேள்விக்கு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.