அதிமுக முன்னாள் அமைச்சர் என்.ஆர்.சிவபதி இல்லத் திருமண விழா வரும் 29ஆம் தேதி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் நடைபெறுகிறது. இதற்கான வரவேற்பு விழா 28ஆம் தேதி இன்று நடைபெறவுள்ள நிலையில், அதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். இதேபோல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சிவபதி இல்ல மண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை திருச்சி வந்தடைந்தார்.  அதிமுக  ஆயிரக்னக்காண தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து திருச்சி விமான நிலையம் அருகே தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி மேடையில் பேசியது.. தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக சிறப்பான ஆட்சியை மக்களுக்கு தந்தது. குறிப்பாக தமிழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்றதில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், மற்றும் ஜெயலலிதா பங்கு மக்களால் மறுக்கமுடியாது என்றார். ஆனால் தற்போது தமிழகத்தில்  திமுக ஆட்சி அமைத்து 15 மாதங்கள் ஆகிறது. இத்தனை மாதங்களில் திருச்சியில் ஏதாவது திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்களா?  அல்லது தமிழ்நாட்டில் யாவது புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்களா? என கேள்வி ஏழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர்  அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களில் முடிவுற்ற நிலையில் இருந்தவையை  திமுக ஆட்சி அமைத்த பிறகு அவற்றை தொடங்கி வைத்து நாங்கள் தான் திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் என கூறுகிறார்கள் என குற்றம்சாட்டினார்.




மேலும் திமுக ஆட்சியின் மெத்தன போக்கால் குடிநீர் திட்டம் முடங்கி போய் உள்ளது. குறிப்பாக அதிமுக ஆட்சியில் திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை, தொழில்நுட்ப பூங்கா, வண்ணத்துப்பூச்சி,  ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள், மேம்பாலங்கள் ,சாலை விரிவாக்கத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம் என்றார். மேலும் திருச்சி ஜங்சன் பகுதியில் இருக்கும் அரிஸ்டோ மேம்பாலத்தின் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை தொடர்ந்து திமுக ஆட்சி ஒரு விடியா ஆட்சி என தெரிவித்தார். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அன்றாடம் ஃபோட்டோ ஷூட் மட்டுமே எடுத்துக் கொண்டிருக்கிறார். மக்களுக்காக எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றார்.  குறிப்பாக தமிழகத்தில் திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி இல்லை என தெரிவிகின்றனர். ஆனால் சென்னை மெரினா கடற்கரையில்  80 கோடியில் பேனா சிலை வைக்க வேண்டுமா? இந்த பணத்தில் ஆறரை கோடி பேர்களுக்கு பேனா வாங்கி கொடுத்து விடலாம். தலைவர்களின் நினைவாக சின்னம் வைக்க வேண்டாம் என கூறவில்லை ஆனால் 80 கோடி ரூபாய்க்கு வைக்க வேண்டுமா! 1 கோடியில் பேனா வையுங்கள் யார் வேண்டாம் என்றார். 




திமுக ஆட்சி ஏற்ற பிறகு மூன்று  போனஸை மக்களுக்கு  கொடுத்துள்ளார்கள். சொத்து வரி, மின்சார வரி, குடிநீர் வரி உயர்வு இதுதான் போனஸ் இதனால் மக்கள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்தினால் தமிழகத்தில் இருக்கக்கூடிய நிறுவனங்கள் அனைத்தும் வேறு மாநிலத்திற்கு சென்று விடும் என்றார். ஸ்டாலின் அவர்கள்ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் இதுவரை தமிழ்நாட்டில் அல்லது திருச்சியில் எத்தனை திட்டங்களை கொண்டு வந்துள்ளார். 1000 ரூபாய் உரிமை தொகை தருவதால் கூறி குடும்ப  மக்களை ஏமாற்றி விட்டது,  இந்த விடியா அரசு.  மேலும் சில பேர் அதிமுகவை கலைக்க பார்க்கிறார்கள் எந்த கொம்பனாளையும், அனைத்திந்திய அண்ணா முன்னேற்ற திராவிட கழகத்தை தொட்டுப் பார்க்க  கூட முடியாது என்றார். அதிமுகவில் ஜெயலலிதா மறைந்த பிறகு பிரச்சனை ஏற்பட்டபோது கட்சியின் இரண்டு பேரும் இணைந்து செயல்பட வேண்டும் என  முக்கிய நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தெரிவித்தனர். அதன்படி இணைந்து செயல்பட்டு ஆட்சியை சிரப்பாக நடத்தபட்டது. ஆனால் தற்போது மீண்டும் வேதாளம் முருக மரம் ஏறுனது போன்று ஆகிவிட்டது என்றார். ஆனால் சிலர் திமுகவுடன் கை கோர்த்து அதிமுகவை அளிக்க முயற்சி செய்கிறார்கள் ஒருபோதும் நடக்காது. 


ஓபிஎஸ் , மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கும், அதிமுகவிற்கும் உண்மையாக இல்லை. திமுகவுடன் இணைந்து அதிமுகவை அளிக்க நினைக்கிறார் என குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ரவுடிகள், குண்டர்களை காரில் அழைத்து வந்து அனைத்து பொருட்களையும் அடித்து நொறிக்கினார். மேலும் ஆவணங்கள், சில முக்கிய பொருட்களை தீ வைத்து எரித்தார். இப்படி அதிமுகவிற்கு உண்மையாக இல்லாதவருடன் இணைய முடியுமா? முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ஓபிஎஸ் ,திமுகவுடன் கூட்டணி போட்டுக்கொண்டு இந்த கட்சியை பிளவு படுத்த நினைக்கிறார். ஓபிஎஸ் மட்டுமல்ல அவரை போன்ற எத்தனை பேர் வந்தாலும் அதிமுகவை ஆட்டி பார்கவோ, அசைக்கவோ முடியாது என தெரிவித்தார். மேலும்  அதிமுகவை பாதுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார்.