திருச்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “கடந்த 8 ஆண்டு காலத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. கடந்த 2014 முதல் வீடற்ற ஏழைகளுக்கு 52 லட்சம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது. 2024 க்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு விடும். கடந்த 2014ஆம் ஆண்டுசூரிய மின் உற்பத்தி 2 Gyga watt ஆக இருந்த நிலையில் தற்போது 53 GW ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் அதிக வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியா உள்ளது. ஆதார், ரேஷன் கார்டு இணைப்பால் 4 கோடி போலி ரேஷன் கார்டுகள் ஒழிக்கப்பட்டுள்ளது.
2018 ல் 2022 வரை 7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. 2014க்கு பிறகு தமிழகத்தில் 228 சிலைகள் வெளிநாட்டில் இருந்து மீட்டு வரப்பட்டுள்ளது” என சாதனைகளை பட்டியலிட்டார்.
பின்னர் செய்தியாளர் கேள்விகளுக்கு பதிலளிக்க அண்ணாமலை கூறியது: மேகதாது ,முல்லைப் பெரியாறு விவகாரத்தில் காங்கிரஸ் இரட்டை வேடம், திமுக கபடநாடகம் போடுகிறது என்றார். மேலும் தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிப்படைந்துள்ளது. தமிழக காவல்துறையின் கைகள் கட்டப்பட்டு உள்ளது.ன் குறிப்பாக இதுவரை காணாத ஊழலை, இனி வரும், 2 ஆண்டுகளில் தமிழகம் காணப்போகிறது. திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கு தனி இலவச டோல்பிரீ நம்பரை ஆரம்பிக்க யோசித்து வருகிறோம் என்றார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் எனக்கு பதில் கூறுவதற்கு பதிலாக சட்ட ஒழுங்கை பாதுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்.. திமுக ஆட்சி குறுநில மன்னர்களின் ஆட்சி. shell கம்பெனிகளை வளர்க்கக்கூடிய ஆட்சி. பாஜக வெளியிடும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து திமுக தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். இந்த ஆட்சியை கவிழ்ப்பது பாஜகவின் நோக்கமல்ல என தெரிவித்தார். இந்தியாவில் வீடில்லாத ஏழைகளுக்கு இதுவரை, 58 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இனி கட்டப்படும், 16 லட்சம் நவீன தொழில்நுட்பம் மூலம் கட்டப்படுகின்றன. இந்தியாவில் கொரானா, 3வது, 4வது, 5வது அலை ஏற்படாதற்கு காரணம் மோடி அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் காரணம் என்றார். மேலும் கடந்த, 8 ஆண்டு பாஜக ஆட்சி, சேவை, முன்னேற்றம், ஏழைகளுக்கான ஆட்சி உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு கடத்தப்பட்ட, 228 புராதன சிறப்பு வாய்ந்த சிலைகளை தமிழகத்திற்கு மீட்டு கொண்டு வந்துள்ளோம். முத்தலாக் தடை செய்ததன் மூலம், 82 சதவீதம் முத்தலாக் விவாகரத்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் புதிய கல்வி கொள்கையை பற்றி அமைச்சர் பொன்முடி புரியாமல் பேசுகிறார். நானும் , அமைச்சர் பொன்முடியும் விவாதம் செய்தால் சரியாக இருக்கும் என்றார். மேலும் பாஜகவில் யாரு வேண்டுமாலும் சேரலாம் ஆணால் சிலர் சேர வேண்டும் என்றால் மத்தியில் இருப்பவர்கள் தான் முடிவு செய்யவேண்டும் என்றார். குறிப்பாக பாஜக நயினார் நாகேந்திரன் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து, அதற்கும் பாஜக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.
திமுக ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்கென்ற தனி Toll Free நம்பரை ஆரம்பிக்கலாம் என்று யோசித்து வருகிறோம். அதிமுக பொன்னையன் தமிழகத்தில் பாஜக வளர்ந்தால் அதிமுகவிற்கு ஆபத்து என கருத்து தெரிவித்திருந்தது குறித்த கேள்விக்கு எந்த கட்சி தலைவரும் அவரவர் விருப்பங்களை தெரிவிக்கலாம் தன்னுடைய கட்சி முதல் நம்பர் ஒன் கட்சியாக இருக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஆசை இது அவருடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார். பாஜகவின் கொள்கையால் தமிழகத்தில் வளர முடியாது என்ற மற்றொரு என கேள்விக்கும் பதிலளித்த அண்ணாமலை அரசியலில் மைக்கை எடுத்து பேசுவது எளிது தமிழகத்தில் பாஜக வாக்கு 8 சதவீத வளர்ச்சியை தாண்டி சென்று கொண்டிருப்பது என்பது தமிழகத்தில் மக்கள் பாஜகவை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதாகும். 2024 லோக்சபா தேர்தலில் அது தெரியும். தமிழகத்தில் மாற்றம் துளித்துளியாய் வராது மடைதிறந்த வெள்ளம்போல் வரும். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இருந்து 25 எம்பிக்க ளை கொண்டு பாஜக செல்லும் என பதிலளித்தார். தமிழகத்திற்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை முழுவதும் மே மாதம் வரை கொடுத்துள்ளோம் தமிழக நிதியமைச்சர் பிரித்து பேசுவதால் இதில் அதிக குழப்பம் உள்ளது. தமிழகம் தான் 25 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு கொடுக்கவேண்டும் என பாஜக அண்ணாமலை தெரிவித்தார்.