Vinayagar Chaturthi 2024: திருச்சியில் 2 நாள் போக்குவரத்து மாற்றம் - காவல்துறை அறிவிப்பு

Vinayagar Chaturthi 2024: திருச்சி மாநகரில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது - காவல்துறை அறிவிப்பு

Continues below advertisement

திருச்சி மாநகரத்தில் வருகின்ற 9 ஆம் தேதி மதியம் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளதை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வருகின்ற 9 ஆம் தேதியன்று மதியம் 4.00 மணி முதல் 10 ஆம் தேதி அதிகாலை 6.00 மணிவரை திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின்படி திருச்சி மாநகரில் கீழ்கண்டவாறு வாகனப் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

புறநகர் பேருந்துகள்

துறையூர், அரியலுார், பெரம்பலூர் மற்றும் கடலூர் ஆகிய மார்க்கத்திலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரும் புறநகர் பேருந்துகள் அனைத்தும் நெ.1 டோல்கேட்டிலிருந்து கொள்ளிடம் பாலம், காவல் சோதனைச்சாவடி எண்.6, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, மாம்பழச்சாலை சந்திப்பில் பயணிகளை இறக்கி, ஏற்றி விட்டு பின்னர் அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, காவல் சோதனைச்சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.

நகரப் பேருந்துகள்

லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் மற்றும் வாத்தலை ஆகிய பகுதிகளிலிருந்து திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் வரும் நகரப் பேருந்துகள் அனைத்தும் நெ.1 டோல்கேட்டிலிருந்து கொள்ளிடம் பாலம், சோதனைச்சாவடி எண்.6, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, மாம்பழச்சாலை சந்திப்பில் பயணிகளை இறக்கி, ஏற்றி விட்டு பின்னர் அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையம், இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.


மேலும், சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி.ஜங்சன், சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் உழவர் சந்தை, MGR சிலை, நீதிமன்ற சந்திப்பு, முத்தரையர் சிலை சந்திப்பு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, TVS டோல்கேட், பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, சஞ்சீவி நகர் சந்திப்பு, கே.கே.சாலை சந்திப்பு, T.V.கோவில் மேம்பாலம், மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றி விட்டு பின்னர் இராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்கோவில் சந்திப்பு, சென்னை பைபாஸ் ரோடு வழியாக மீண்டும் அதே வழியில் சத்திரம் பேருந்து நிலையம் செல்லவேண்டும்.

அதேபோல் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவெறும்பூர், துவாக்குடி செல்லும் நகரப்பேருந்துகள் அனைத்தும் கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி.ஜங்சன், சாஸ்திரி ரோடு, அண்ணாநகர் உழவர் சந்தை, MGR சிலை, நீதிமன்ற சந்திப்பு, முத்தரையர் சிலை சந்திப்பு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, TVS டோல்கேட், பால்பண்ணை ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் அதே வழியில் சத்திரம் பேருந்து நிலையம் செல்ல வேண்டும்.


கனரக வாகனங்கள்

கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் குளித்தலை காவேரிப் பாலத்தில் திருப்பி விடப்பட்டு, முசிறி, நெ.1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பால்பண்ணை ரவுண்டானா வழியாக தஞ்சாவூருக்கும், TVS டோல்கேட் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.

தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ்ரோடு, காவேரி பாலம், நெ.1 டோல்கேட், வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும்.

விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தை முன்னிட்டு வாகனப் போக்குவரத்து வழிதடங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றத்தை அனைத்து தரப்பு மக்களும் கடைபிடித்து திருச்சி மாநகரில் சீரான போக்குவரத்து இயங்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி கேட்டுக்கொண்டுள்ளார். 

Continues below advertisement