ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து பல பூக்களால் பூஜித்த பின் இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால், அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய காரியத்தில் வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன்' என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது. சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு நாரதர் இக்கதையைக் கூறி, கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம். இந்து மக்கள் அனுட்டிக்கின்ற விரதங்களில் விநாயக சதுர்த்தி விரதம் முக்கியமான ஒன்று ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதச் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி அனுட்டிக்கப்படுகின்றது. அன்றைய தினம் உலகெங்கணுமுள்ள இந்துக்கள் பய பக்தியோடு விநாயக வழி பாடியற்றி, உண்ணா நோன்பிருந்து, தான தர்மங்கள் செய்து கொண்டாடுகின்றனர். நாட்டுக்கு நாடு அந்தக் கொண்டாட்டங்கள் வேறுபட்ட முறைகளில் கொண்டாடப்படுவதைக் காணலாம். ஆகையால் இந்தாண்டு விநாயகர் சிலைகலை அதிக அளவில் கைவினை தொழிலாளர்கள் தயாரித்து வருகிறார்கள். குறிப்பாக இம்மாதம் வரும் 18 ஆம் தேதி விநயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாபட உள்ளது. 




இந்நிலையில் திருச்சி புறநகர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசின் விதிமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், சிலைகளை நிறுவுதல் மற்றும் கரைத்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலும் விழா அமைப்பாளர்களுடனான மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதில் எஸ்.பி. வருண்குமார் பேசுகையில், "விநாயகர் சிலையை நிறுவ உள்ள இடம் அரசு இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி துறையிடம் இருந்து தடையின்மை சான்று பெறப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரியிடம் இருந்து ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட வேண்டும். மின்சாரம் பெறப்படும் இடம் அல்லது தற்காலிக மின் வினியோகத்திற்கான கடிதம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் இருந்து பெறப்பட வேண்டும். இவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது வருவாய் கோட்டாட்சியரால் பரிசீலனை செய்து அனுமதி வழங்கப்படும்.




திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளில் 919 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகள் நிறுவவும், சரியான நேரத்தில் ஊர்வலத்தை நடத்தவும் அறிவுறுத்தினார். மேலும் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இல்லாமல் அமைதியான முறையில் சிலைகளை நிறுவுவதற்கு மாநில அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தெரிவித்தார். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ஒரு சில இடங்களில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட உள்ளதாக கூறினர். இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக துவரங்குறிச்சி, புத்தாநத்தம், தொட்டியம் அருகே உள்ள குளக்கொடி ஆகிய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மேற்கண்ட 3 இடங்களிலும் கூடுதல் பாதுகாப்பு போடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதிகளில் நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கும் ஊர்வலம் வருகிற 20 ம் தேதி நடைபெற உள்ளது. ஆகையால் பொதுமக்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுகொண்டனர்.